சங்க காலமுதல் தமிழர்கள் தைத்திரு நாளினை
சீர்ப்பொருளோடு சிறப்பித்து வருகின்றனர். தமிழர்கள் கொண்டாடி வருகின்ற
பெருவிழாக்களில் ஒன்று தைத்திருநாள். அத்தகைய தைத்திரு நாளினை பல நூல்கள்
போற்றிப் புகழ்ந்து பாடிய போதும் பாவை இலக்கியங்களாக நாம் பாடியதில்லை.
ஏறக்குறைய அரைநூற்றாண்டுக்கு முன்பு கவியரசு கண்ணதாசன் தைப்பாவையை
பாடியுள்ளார். பாவை இலக்கியங்களான திருப்பாவையும், திருவெம்பாவையும் சமயம்
சார்ந்து பாடப்பட்டனவாக உள்ளன. அவற்றை மார்கழித் திங்களன்று பாடிப் பரவித்
தொழுகின்றனர்.
தமிழர்கள் வாழ்வில் வளமான செல்வத்தை
அளிக்கின்ற தைத்திங்களை
மாதம் முழுதும் வாழ்த்திப் பாடவும், தை மாதத்தை
முழுவதுமாக நங்கையர் ஆடவர் கூடிக் கொண்டாடவும் பாடிய “தமிழ்ப் பாவை’’யை
தாய்த்தமிழ் நாட்டினர்க்கும் மற்றும் உலகம் முழுவதும் பரந்து விரிந்து
வாழ்கின்ற
பெருங்குடிகளான அயலகத் தமிழர்களுக்கும் மற்றும் தமிழ்
ஆர்வலர்களுக்கும் எளியவனினும் எளியவனாகியவன் உரிதாக்குகிறேன்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment