பல்வகை இனக்குழுக்கள் இணைந்து வாழுகின்ற
சமுதாயமாகத் தமிழ்ச் சமுதாயம் தொன்றுதொட்டு விளங்கி வந்துள்ளது. ஒவ்வொரு
இனக்குழுவும் தனிக்கென தனித்த அக, புற அடையாளங்களை அடையாளப்படுத்திக்கொண்டு
தமிழகத்தில் வாழ்ந்துள்ளன. வாழ்ந்து வருகின்றன. இவ்வினக்குழுக்களை தமிழ்
மொழி ஒன்றிணைத்துள்ளது. பல்வேறு இனக்குழுக்களுக்களுக்கான தனித்த
அடையாளங்களைத் தாண்டி தமிழ்நிலம், தமிழ் மொழி என்ற இணைவு பொதுமைநிலையில்
தமிழ்ச்சமுதாயத்தில் செயல்பட்டு ஒற்றுமையைக் காத்து வந்துள்ளது.
தமிழகத்தில் வாழ்ந்துவரும் பல்வேறு
இனக்குழுக்களில் கணக்கீடு செய்யும் இனக்குழுவினர் முக்கிய இடம்
பெறுகின்றனர். காலத்தை., பொருளின் அளவை, சமயத்தை இவை போன்றவற்றைக் கணக்கீடு
செய்யும் தமிழர்கணக்கீட்டு முறைமை சங்ககாலந்தொட்டு இருந்து வந்துள்ளது.
ஓலைக்கணக்கர், நாழிகைக் கணக்கர், மந்திரக்கணக்கர், அமயக் கணக்கர், ஆசிரியக்
கணக்கர், பெருங்கணக்கர், கணக்கியல் வினைஞர், காலக்கணிதர்,
ஆயக்கணக்கர்போன்ற பல குழுவினர் கணக்கீடு செய்யும் குழுவினராகச் செம்மொழி
இலக்கிய காலத்தில் இருந்து வந்துள்ளனர். இதற்கான சான்றுகள் பல செம்மொழி
இலக்கியங்களில் உள்ளன.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment