தமிழ் இலக்கிய வடிவங்களி்ல், நெடுங்கால வரலாற்றையும், நீண்ட நெடிய
பாரம்பரியத்தையும், பரந்து விரிந்த களங்களையும், அளவில் பெருமையையும் கொண்ட
கவிதை வடிவம் மரபுக்கவிதை வடிவம் ஆகும். புதுக்கவிதையின் எழுச்சியினால்
மரபுக்கவிதை எழுதுவது தற்கால எல்லையில் குறைவுபட்டிருப்பினும் முற்றிலும்
அழிந்துவிடாமல் இவ்வடிவம் மரபுக்கவிஞர்களால் காக்கப் பெற்று வரப்பெறுகிறது.
பழைய மரபிலக்கியம், மரபிலக்கணம் ஆகியவற்றின்மீது படைப்பாளர்கள், வாசகர்கள்
கொண்டிருக்கும் மதிப்பு, பற்று, உயர்ச்சித்தன்மை ஆகியவற்றின் காரணமாக
மரபுக்கவிதை வடிவம் தன் இருப்பைத் தக்கவைத்தே தற்காலத்தில் வளர்ந்து
வருகிறது.
ஆசிரியப்பா, வெண்பா என்ற மரபுக்கவிதை
வடிவங்கள் முறையே சங்கப் பழமைக்கும், நீதிநூல் பழமைக்கும் உரியன.
திருத்தக்கதேவர், கம்பர் போன்றோரால் விருத்தப்பா விளக்கம் பெற்றது. பதிகம்
பாடும் சிறப்பு பக்தி இலக்கியத்திற்கு வாய்த்தது. அருணகிரிநாதரால் சந்தம்,
வண்ணம் ஆகியன மதிப்பு பெற்றன. தாயுமானரால் கண்ணி என்னும் மரபு வளம்
பெற்றது, சித்திரக்கவிகளும் மரபுக்கவிதைகளின் கட்டமைப்பு வளர்ச்சியாக
அமைந்தன.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment