தலித் ஆளுமை அன்னை மீனாம்பாள் பற்றிய
நிகழ்ச்சி அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அன்னை மீனாம்பாள் அவர்கள் 1904
ஆம் ஆண்டு, டிசம்பர் 26 ஆம் தேதி பிறந்தார்.
இரங்கூனில் இவரது பாட்டனார் மதுரைப்பிள்ளை
பிரபலமானவர். ‘வணிகர் விக்டோரியா’, ‘மதுரை மீனாட்சி’ என்கிற இரண்டு
லாஞ்சுகள் அவருக்குச் சொந்தமானவை. இண்டர்மீடியட் படித்துவிட்டுத்
திருமணத்துக்காக 16வது வயதில் சென்னைக்கு வந்தார் அன்னை மீனாம்பாள்.
அப்போதிலிருந்து தொடர்ந்து சமூகப்பணிகளை தான் இறக்கும் வரையில் செய்து
வந்திருக்கின்றார். சைமன் குழு வருகையை ஆதரித்துப் பேசி 1928இல் தன் பொது
வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.
மிகச் சீரிய சுயமரியாதை வீரங்கனை. ஆம்,
அன்றைய காலக்கட்டங்களில் தந்தை பெரியார் அவர்களோடு பல்வேறு கூட்டங்களில்,
திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றியவர்.
அவருடைய பெரியப்பா வேணுகோபால் பிள்ளை
அவர்கள் கடப்பையில் நகராட்சி ஆணையாளராகப் பணிப்புரிந்தவர். சென்னை
ஸ்பர்டாங் சாலையில் நீதிக்கட்சியின் தூண்களில் ஒருவரான டாக்டர் டி. எம்.
நாயர் ஆற்றிய சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர். அந்த வகையில்
நீதிக்கட்சியுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment