கடந்த சில வாரங்களாகவே தமிழக மக்களின்
செவிகளில் தவறாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் சொற்கள், வைரமுத்துவும்,
ஆண்டாளும், அதனைப் பற்றிய சர்ச்சையும் தான் என்றால், மறுப்பதற்கில்லை.
கவியரசு வைரமுத்து அவர்கள், தினமணியில் வெளிவந்திருக்கும் தன்னுடைய கட்டுரை
ஒன்றில், ஆண்டாளைப்பற்றி பல செய்திகள் பெருமையாகத்தான் சொல்லியிருக்கிறார்
என்பது அந்தக் கட்டுரையைப் படித்த வாசகர்களுக்கு நன்கு தெரியும். ஒரே ஒரு
வரி மட்டும் தான், ஏழாம் நுற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள் நாச்சியார் என்பவர்
தேவதாசி குலத்தில் பிறந்திருக்கலாம் என்பதை குறிப்பிட்டு இருக்கிறார்.
அதுவும் அவருடைய கருத்து அல்ல என்பதை மிகவும் தெளிவாக விளக்கியிருக்கிறார்.
“அந்த செய்தி 1975ம் ஆண்டு சிம்லாவில்
உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ட்ஸ் ஸ்டடீஸ் என்ற அமைப்பு ஒரு
கருத்தரங்கை நடத்தியது. அதில், 45 இந்திய வரலாற்று அறிஞர்கள் பங்கேற்று, 26
கட்டுரைகளை வெளியிட்டனர். அந்த கட்டுரைகளின் தொகுப்பு பின்னர் Indian
movements: Some Aspects of dissent protest and reform என்ற பெயரில்
புத்தகமாக வெளியானது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment