தலைவனும் தலைவியும் காதல் மொழி பேசி
மகிழ்ந்து இருக்கின்றனர். அப்படி இல்லாத காலங்களில், தலைவனின் பிரிவை எண்ணி
தலைவி வருந்தி வாடுகின்றாள். அதன் காரணமாக பசலை கொண்டு உடல் இளைத்து, தோல்
வெளுத்து விடுகின்றாள். அவள் கைகள் மெலிந்து வளையல்கள் அணிய முடியாது
கழன்றுவிடுகின்றன. அவளின் களவொழுக்கத்தை அறியாத தலைவியின் தாயும், செவிலித்
தாயும், கட்டுவிச்சியை அழைத்து குறிச் சொல்ல வேண்டுகின்றனர்.
கட்டுவிச்சி என்பவள் குறிஞ்சி மலையில்
வாழும் அகவன் மகள். அவள் அரிசியைத் தூவி அந்த அரிசிகள் விழும் அமைப்பைக்
கொண்டு குறி சொல்கின்றாள். குறிஞ்சி நிலக் கடவுள் முருகனின் அணங்கினால்
தலைவிக்கு பாதிப்பு என கூறுகிறாள். முருகனின் கோபம் தணிய வேலனை அழைத்து
வந்து வெறியாட்டம் ஆட வேண்டும் எனச் சொல்கிறாள் வேலன் என்பவன் குறிஞ்சி
நிலக் கடவுளான முருகனுக்கு வழிபாட்டுக்கு தேவையானவற்றை செய்பவன்.
தொல்காப்பியம் கட்டுவிச்சி, வேலனை பற்றிக்
கூறும்போது, ‘களவு அலர் ஆயினும், காமம் மெய்ப்படுப்பினும், அளவு மிகத்
தோன்றினும், தலைப்பெய்து காணினும், கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும்
ஒட்டிய திறத்தான் செய்திக்கண்ணும் ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும்’
(தொலகாப்பியம், பொருளதிகாரம் 115). என்கின்றது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment