Wednesday, 28 February 2018

மதுரை மீனாட்சி அம்மன் தீ விபத்தும், இந்து சமய அறநிலையத்துறையை அபகரிக்கும் திட்டமும்.!


Siragu madurai1

சில வாரங்களுக்கு முன், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து நடந்தது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், முடிவில் மின் கசிவு என்று சொல்லப்படுகிறது. இனி, விசாரணையில் தான் முழு விவரம் தெரிய வரும். அதுவும், நேர்மையான விசாரணையாக இருக்கும் பட்சத்தில் தான். இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோவில் தலவிருட்சமான ஆலமரத்தில், தீப்பிடித்து எரிந்தது. அதே போல, தஞ்சை மாவட்டத்திலுள்ள, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், சிவராத்திரி விழாவின் போது, கொடிமரத்தின் அருகே, பால் காய்ச்சிக்கொண்டிருந்த எரிவாயு உருளையிலுள்ள ரப்பர் குழாயில் தீப்பிடித்தது. பெரிய அசம்பாவிதம் ஏதும் நடவாமல், தீ அணைக்கப்பட்டது. இதனை அடுத்து, திருவாரூர் தியாகராஜர் கோவிலில், அம்மனுக்கு சாத்தப்பட்ட துணியில், பக்கத்திலிருந்த அகல்விளக்கின் மூலம் தீப்பிடித்து, உடனே அணைத்தனர். தொடர்ந்து, இது போன்ற செய்திகளை அதாவது தமிழ்நாட்டு கோவில்களில் தீப்பிடிக்கும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராயாமல், பரிகாரங்கள் செய்யவேண்டும் என்ற மூடநம்பிக்கைகள் பரப்பப்படுகின்றன. இன்னும் சில பேர், ஆட்சிக்கு ஆபத்து, நாட்டு மக்களுக்கு ஆபத்து என்ற புரளியை கிளப்பி விடுகின்றனர். இதையெல்லாம் விட, மிகப்பெரிய பாறாங்கல்லை நம் தலையில் தூக்கிபோடுவது போல், ஆரியம் ஒரே விசயத்தை, திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறது.!


இதை வைத்து, இந்து அமைப்பினர், வலது சாரியினர், பாசக, என அனைத்து இந்துத்துவவாதிகளும் மக்கள் மனதில் நஞ்சை விதைக்க முயற்சி செய்கிறார்கள். அது என்னவென்றால், இந்து சமய அறநிலையத்துறையை நீக்க வேண்டும் என்பது தான். அதற்கான, அவர்களுடைய காரணம், ஊழல் மலிந்து விட்டது. லஞ்சம் லாவணியம் மிக சுலபமாக நடந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment