“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்னும்
பழமொழிக்கேற்ப வாழ்வின் சிறந்த செல்வமாகக் கருதப்படும் நோயில்லாமல்
ஆரோக்கியமாக வாழ்வெதென்பது இன்றைய சூழலில் எட்டாக் கனியாக உள்ளது. இதற்கு
முக்கியக் காரணம் நம் வாழ்க்கை முறைதான். நமது உணவு முறையும், மருத்துவ
முறையும் நாகரிகத்தை நோக்கிச் செல்ல செல்ல நமது ஆரோக்கியம் இழிநிலைக்கு
போய்க்கொண்டிருக்கிறது. இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை முறையையும் சித்த
மருத்துவத்தின் மகத்துவத்தையும் உணர்ந்து வாழ்க்கை நடத்தி வந்த நம்
முன்னோர்கள் நம்மை விட ஆரோக்கியத்துடனும், ஆயுளுடனும் வாழ்ந்து வந்தனர்.
நமது இன்றைய நிலைக்கான சில காரணங்களையும், சில எளிய மருத்துவ முறைகளையும்
இக்கட்டுரையில் காண்போம்.
சமையல் அறை மாற்றங்கள்
விளம்பர வாழ்க்கை வாழ விரும்பும் நாம்
விளம்பரங்களைப் பார்த்து நமது வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொண்டுள்ளோம்.
மண்பானைகளாலும், கண்ணாடி பாட்டில்களாலும், உலோக உபகரணங்களாலும் நிறைந்த நம்
சமையலறையை இன்று ஆடம்பர அலங்காரத்திற்காக பிளாஸ்டிக் பாட்டில்களாகவும்,
Nonstick, Airtight container பாத்திரங்களாகவும் மாற்றியுள்ளோம். உப்பு,
புளி, ஊறுகாய் போன்றவை பிளாஸ்டிக் பாத்திரத்தில் வைத்து உபயோகப்படுத்துவது
நமக்கு நாமே விசம் உண்பதற்கு சமம் என்று தெரிந்தும் பிளாஸ்டிக் ஜார்களில்
விளம்பரப்படுத்திய ஊறுகாயைத்தானே வாங்கி பயன்படுத்துகிறோம். பிளாஸ்டிக்
பாட்டில்களில் சூடான பொருட்களை ஊற்றுவது அதன் விசத்தன்மையைத் தரும் என்று
தெரிந்திருந்தும் குழந்தைகளுக்கு பல வண்ணங்களில் பாட்டில்களை வாங்கி அதில்
சுடச்சுட நீரை ஊற்றிக் கொடுத்து பள்ளிக்கு அனுப்புகிறோம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment