Wednesday, 14 February 2018

நசுக்கப்படும் தமிழ்மக்களின் வாழ்வாதாரங்கள்

தமிழகத்தில் நடக்கும் தற்போதைய நிகழ்வுகள் அனைத்தையும் பார்க்கும்போது தமிழர்களின் வாழ்வுரிமை மற்றும் அதற்கான ஆதாரங்களை திட்டமிட்டே அழிக்கும் செயலில், மத்திய அரசாங்கம்  ஈடுபடுகிறது என்பதில் எல்லோருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.  அதிலும் கடந்த ஓராண்டாக, தமிழகத்தின் ஆட்சி, மத்திய அரசிடம் அடகு வைக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. மக்கள் அனைவருக்கும் இந்த அச்சவுணர்வு இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. தமிழ்நாட்டிற்கு எவ்வித வளர்ச்சித்திட்டங்களும் போடப்படவில்லை, அமல்படுத்தபபடவில்லை. அது மட்டுமல்லாமல், அனைத்து ஆதாரங்களையும் சுரண்டுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.
Siragu-farmers


முதலில் விவசாயத்திலிருந்து ஆரம்பிப்போம். விவசாயத்திற்கான முக்கிய ஆதாரமே நீர் தான். அதனை தேவையான சமயத்தில் வழங்குவதில் முனைப்பு காட்டவில்லை இந்த மத்திய பா.ச.க அரசும், மாநில அ.தி.மு.க  அரசும். மழை பொய்த்துவிட்டது. நமக்கு முறையாக, கர்நாடகத்திலிருந்து  வழங்கப்படவேண்டிய தண்ணீர் வழங்கப்படவில்லை. கர்நாடகத்திலிருந்து நமக்கு கிடைக்கவேண்டிய நீரை பெற்றுத் தர மத்திய, மாநில  அரசுகள் தவறி விட்டன. காவேரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு, அதனை மறுத்துவிட்டது. தமிழகத்தில் விவசாயம் கேள்விக்குறியாகி விட்டது. விவசாயம் பொய்த்துவிட்டதால், வறுமையில் வாடும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையினை இந்த இரு அரசுகளும் ஏற்படுத்தி விட்டன. கடன் தள்ளுபடி கேட்டு இன்னமும், விவசாயிகள் போராடி வருகின்றனர். மக்கள் அனைவருக்கும் உணவிடும் விவசாயிகள், இன்று உண்ண உணவில்லாமல் தவித்து வருகின்றனர். மேலும், மீத்தேன் எடுத்தல்,

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment