தமிழகமக்களின் தற்போதைய மிகப்பெரிய சுமை,
இந்த பேருந்து கட்டண உயர்வு என்பது நம்மில் யாருக்கும் மாற்றுக் கருத்து
இருக்கமுடியாது. அந்த அளவிற்கு மக்களை மிகவும் வாட்டி
வதைத்துக்கொண்டிருக்கும் துயரம் இந்த பேருந்து கட்டண உயர்வு. இது சரியான
நிர்வாக அமைப்பு இல்லாததையே காட்டுகிறது. நிதி பற்றாக்குறை மற்றும்
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் என்ற ஒரு நொண்டி சாக்கை
கூறிக்கொண்டிருக்கிறது. இந்த நிர்வாக திறமையற்ற அதிமுக அரசு.!
எல்லாவற்றிக்கும் முதன்மை காரணம்
என்னவென்றால், போக்குவரத்து ஊழியர்களின் பிடிக்கப்பட்ட தொகையை வைப்பு
கணக்கில் வைக்காமல், வேறு செலவினத்திற்காக திருப்பிவிட்ட காரணத்தினால்
ஏற்பட்ட ஒரு மோசமான விளைவு தான், இந்த நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதனால் தான் அவர்கள் கேட்கும் நேரத்தில் கொடுக்க முடியாமல் போனது. இதனால்
போராட்டம், வேலை நிறுத்தம். அதனைத் தொடர்ந்து பேருந்து கட்டண உயர்வு என
அனைத்தும் நடக்க காரணமாக இருந்திருக்கிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment