விஜயநகர அரசன் மல்லிகார்ச்சுனராயரின்
(1449 – 1465) அரசப் பிரதிநிதியான “சாளுவத் திருமலைராயன்”
(1453/1455-1468) என்பவர் காலத்தவர் கவி காளமேகம் என்று அறியப்படுகிறது.
சாளுவத் திருமலைராயன் என்னும் தெலுங்கு மொழி சிற்றரசனைக் குறித்துத் தனது
பாடல்கள் பலவற்றில் குறிப்பிட்டுள்ளார் காளமேகம்.
சகம் 1875ல் தோன்றிய சாளுவத்
திருமலைராயனைக் குறிப்பிடும் கல்வெட்டொன்று திருவானைக்காவில் உள்ளது என்று
ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை குறிப்பிடுகிறார். இவனது தலைநகரம் திருமலைராயன்
பட்டினம் என்ற குறிப்பு அவனது கல்வெட்டிலும் காணப்படுகிறது என்றும்,
இவனுடைய கல்வெட்டுக்களில் கூறப்படும், ‘சுங்கத் தவிர்த்த சோழநல்லுனரான
திருமலை ராசபுரம்’ என்பது திருமலைராயன் பட்டினம் என்றும் ஔவை. சு.
துரைசாமிப் பிள்ளை கருதுகிறார். தான் பண்டைய சளுக்க மன்னர்களின்
வழித்தோன்றல் என்பதாக இவன் தன்னைச் “சாளுவத் திருமலை தேவமகாராசர்”
(S.I.I.Vol.II. No. 23) என்று கூறிக்கொள்ளுகிறான். இவன் காலத்தவரான
காளமேகப்புலவரும் “கல்யாணிச் சாளுவத் திருமலைராயன்” என்றே
குறிப்பிடுகின்றார். தம் பாடலொன்றில், “….. நிலைசெய் கல்யாணிச்சாளுவத்
திருமலைராயன்” என்ற வரியில் காளமேகம் குறிப்பிடும் கல்யாணி என்பது மேலைச்
சாளுக்கிய மன்னர்களின் தலைநகரம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment