“அம்மா எனக்கு இந்தப் பாடம் புரியல,
சொல்லிக் கொடும்மா” என்று புத்தகத்தோடு தன் அருகில் வந்த அர்ச்சனாவிடம்
லட்சுமி,”போடி அந்தாண்டே, அம்மா வேலையாயிருக்கிறது தெரியலையா?” என்று
எரிந்து விழுந்தாள்.
அர்ச்சனா அம்மாவை அச்சத்துடன் பார்த்துக்
கொண்டே நகர்ந்தாள். லட்சுமி படித்தவள். பெயரில் மட்டுமல்ல, அழகிலும்
மகாலட்சுமியைக் கொண்டிருந்தாள்.
அலைபேசி (Smart Phone) வந்தப் பிறகு ஆறு மாசமாய் அம்மா தன்னிடமிருந்து விலகிப் போவதை அந்தச் சிறுமி உணர்ந்தாள்.
லட்சுமி அர்ச்சனாவிடமிருந்து மட்டும் விலகிப் போகவில்லை. அவள் கணவன் ஹரியிடமிருந்தும் விலகிக் கொண்டிருந்தாள்.
எல்லாம் ஆறு மாசத்துக்கு முன்னால் ஹரிக்கு
அணி தலைவராக பதவி உயர்வு கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாட
லட்சுமிக்கு அலைபேசி ஒன்று வாங்கிக் கொடுத்தான். அதுதான் அவன் செய்த தவறு.
லட்சுமி வாட்ஸ் செயலியைப் பார்க்க ஆரம்பித்தாள். முதல் காதல் மாதிரி அவள்
மனம் அதில் ஈடுபட்டது. பழைய நண்பர்களுடன் தொடர்பு கொண்டாள். கல்லூரியில்
படித்த ஆண் நண்பர்கள், பெண் நண்பர்கள் எல்லோருடன் நட்பு தொடர்ந்தது.
இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாட்டிலும் அவளுடன் கல்லூரியில் படித்த
நண்பர்களுடன் தொடர்பு மலர்ந்தது. வாட்ஸ் அப்பில் அவள் புகைப்படத்தை
அடிக்கடி மாற்றினாள். செய்திகளை போட ஆரம்பித்தாள். வாட்ஸ் அப்பில்
அரட்டை(chatting) செய்ய ஆரம்பித்தாள். ஆண் நண்பர்களிடமிருந்து அவள் அழகைப்
புகழ்ந்து அவளுக்கு செய்தி வரும், அதுவும் எப்படி, ”டார்லிங், அன்பே,
ஆருயிரே, தங்கச்சிலை, செல்லச் சிறுக்கி …” இதைவிட மோசமாய் வரும். அவள்
மறுப்புச் சொல்லாமல் அரட்டை செய்வாள். இரவு நேரத்தில் மிகவும் மோசமாய்
வரம்பு மீறி அரட்டை செய்யும் ஆண் நண்பர்களும் உண்டு.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment