முன்னுரை:
அணங்கே விலங்கே கள்வர்தம் மிறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே
– தொல்காப்பியம், பொருளதிகாரம்: மெய்ப்பாட்டியல்-8/1
அணங்கு முதலாய நான்கும் பற்றி
அச்சம் பிறக்கும் என்று தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் சூத்திரம் (257)
வரையறுக்கிறது. அதாவது, ‘அணங்கு’, ‘விலங்கு’, ‘கள்வர்’, ‘அரசர்’
ஆகியோர் அச்சமென்னும் மெய்ப்பாட்டிற்குக் காரணமாகியவர் என்கிறார்
தொல்காப்பியர்.
அணங்கு என்பதற்குப் பொருள் கூறுமிடத்து
பேராசிரியர், “அணங்கென்பன பேயும் பூதமும் பாம்பும் அசுரர் ஈறாகிய
பதினென்கணனும் நிரயப்பாலரும், பிறரும் அணங்குதற்றொழிலராகிய சவந்தின்
பெண்டிரும் உருமிசைத் தொடக்கத்தனவும்” என்பார். அவர், “கட்புலனாகாமல் தம்
ஆற்றலாற்றீண்டி வருத்தும் சூர்முதலாய தெய்வங்களும் அணங்குதற்றொழிலுடைய
பிறவுமாம்”, என்று இவ்வாறு தரும் இந்த விரிவான விளக்கத்தின் வழியாக
‘அணங்கு’ எனப்படுவது, ‘வருத்தும் திறன் கொண்டு, வருத்தும் தொழிலைச்
செய்யும் ஆற்றல் கொண்டவை’ என்று புரிந்து கொள்ளலாம். ஆக, அணங்கு
வருத்துவது அதனால் அது மக்களுக்கு அச்சம் விளைவிக்கிறது, அது கண்ணுக்குப்
புலனாகாத ஒன்றாகவும் இருக்கலாம். இது பொதுமைப்படுத்தும் ஒரு விளக்கமாக,
அச்சத்தை விளைவிக்கக் கூடிய அணங்கு வகைகளைக் குறிக்கிறது.
I. இலக்கியங்களில் அணங்கு:
பொதுவாக இலக்கியங்களில் “அணங்கு” என்ற
சொல் வருத்தும்-தெய்வத்தன்மை கொண்ட பெண் என்ற வகையில் பயன்கொள்ளப்படுவதைக்
காணமுடிகிறது. இங்கு எடுத்துக்காட்டுகளாகக் குறளில் இருந்தும்
சிலப்பதிகாரத்தில் இருந்தும் காணலாம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.