தமிழர் வரலாற்றில் போரும், விறலும்
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. சங்க இலக்கியப் புறப் பாடல்களில் தமிழ்
மன்னர்களின் போர் பற்றிய குறிப்புகள் உண்டு. அவற்றில் குறிப்பிடத்தக்கது
தலையானங்கானத்து மற்றும் வெண்ணிப் போர்கள் ஆகும்.
தலையாலங்கானம் திருவாவூர் மாவட்டத்தில்
உள்ள ஒரு ஊர். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
சேரனையும் சோழனையும் (சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை,
சோழன் கிள்ளிவளவன்), ஐந்து வேளிரையும் (திதியன், எழினி, எருமையூரன்,
இருங்கோ வேண்மான், பொருநன்) சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில்
தோற்கடித்தான், என்பதாக பல குறிப்புகள் புறநானுற்றுப் பாடல்கள்,
மதுரைக்காஞ்சி போன்ற பாடல் வரிகளின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.
நற்றிணை, அகநானூறு போன்று அகப் பாடல்களிலும் இந்தப் போர் பற்றியக்
குறிப்புகள் உண்டு.
புறநானூறு 19 இல் பாண்டியன் நெடுஞ்செழியனை
எதிர்த்த ஏழு அரசர்களைத் தலையாலங்கானப் போரில் வென்றான் என்றும், அந்தப்
போரில் என் கணவனும் புதல்வரும் மாண்டனர். இனி நமக்கு என்ன இருக்கிறது என்ற
மகளிர் கசிந்து அழுவதைப் பார்த்துக் கூற்றுவனே இரங்கிய போர்க்களம் அது என்ற
குறிப்புகள் உண்டு.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment