தமிழ் இலக்கணம் ஐவகைப்படும். எழுத்து,
சொல், பொருள், யாப்பு, அணி என்பன அவையாகும். ஒரு படைப்பாளன் படைக்கும்போது
பாடுபொருள் ஒன்றை முதலில் தேர்ந்து கொள்கிறான். அதன்பின் அதற்காக
வடிவத்தைத் தேர்ந்து கொள்கிறான். வடிவத்தைத் தேர்ந்தபின் அவ்வடிவத்திற்கான
சொற்களை இணைக்கிறான். இவையெல்லாம் மனதில் உருவாகி எண்ணத்தில் கிளை பரப்பி,
எழுத்துவண்ணமாக வருகின்றன. ஆனால் படைப்பாளன் எண்ணாமலே வருவது அணி. அது
படைப்பிற்று அணி செய்கிறது. அணி இலக்கணத்தைப் படைப்பாளன் படைக்கவேண்டும்
என்று எண்ணிப் படைப்பதில்லை. தானாகவே அது இடம்பெற்று விடுகிறது. படைப்பாளன்
திட்டமிடாமலே படைப்பிற்குள் அணியிலக்கணம் அமர்ந்து கொண்டு, அணிசெய்கிறது.
குறிப்பாகத் திரையிசைப் பாடல்களைப்
புனையும்போது படைப்பாளன் பல நெருக்கடிகளுக்கு உள்ளாகிறான். காலம், அடி
வரையறை, இசைக்கான இசைவு, பாடல் இடம் பெறுவதற்கான சூழல், அதனைப்
பாடுவோர்க்கானப் பாத்திர இயல்பு இவற்றையெல்லாம் எண்ணத்தில் ஏற்றிக்
கொண்டுப் படைப்பாளன் படைத்தாக வேண்டும். இந்நேரத்தில் அணியிலக்கணத்தைக்
கொண்டு வந்துச் சேர்க்கவேண்டும் என்று கவிஞன் எண்ண இயலாது. தானாக வந்து
அமர்ந்து கொள்கிறது அணியிலக்கணம். எனவே மற்ற இலக்கணங்களை விட நுட்பமானது
அணியிலக்கணம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment