மனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப்
பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது
என்பதை மனிதன் அறிந்து நடக்க வழி சொல்லுகிறது. இந்தப் பகுத்தறிவினைக்
கொண்டு மனிதன் ஆக்கங்களையும் உருவாக்கலாம். அழிவுகளையும் உருவாக்கலாம்.
ஆக்க அறிவினை விட அழிவு அறிவினால் தான்
மனித உலகம் பாழ்பட்டு வருகிறது. அணுவைப் பிளக்கலாம் என்ற அறிவு
மெச்சத்தக்கது. ஆனால் அதனைக் கொண்டு அணுகுண்டு தயாரித்து மனித குலத்தையே
அழிக்கலாம் என்பது எவ்வளவு நாசவேலை. எனவே அறிவு என்பது அற்றம் காக்கும்
கருவியாக அமையவேண்டும். அற்றம் தரும் கருவியாக அமைந்துவிடக் கூடாது.
அறிவு நல்ல நிலையில் செயல்பட வேண்டும்.
அதற்கு என்ன வழி. நல்ல அறச்சிந்தனைகளைக் கண்டும், கேட்டும், ரசித்தும்,
விவாதித்தும் அறிவிற்கு அறத்தை உறுதுணையாக ஆக்க வேண்டும். அறமற்ற அறிவு
பாழ்.
இன்னா செய்யாமை என்ற ஓர் அறம் இன்றைய மனித
குலத்திற்குத் தேவையான அறமேம்பாட்டுச் சிந்தனையாகும். பிற உயிர்களுக்குத்
தீங்கு செய்யாமை என்பதே இன்னா செய்யாமை. ‘‘நீ வாழ பிறரைக் கெடுக்காதே”,
”வாழு, வாழவிடு” என்று மக்கள் மொழிகளில் இதனை எளிதாகச் சொல்லிவிடலாம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment