காவேரி மேலாண்மை ஆணையம் என்ற பெயரில்
திருத்தப்பட்ட வரைவுத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அதனை
உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு சற்று ஆறுதலை
கொடுக்கிறது என கொள்ளலாம். இந்த அடிப்படை காவேரி நதிநீர் பங்கீட்டில், நாம்
கடந்துவந்த பாதையை, கடந்தகால செயல்பாடுகளை நினைவுகூர்ந்தோமானால், தமிழக
விவசாயிகள், காவேரி நீருக்காக எப்படியெல்லாம் தங்கள் சுயமரியாதையை இழந்து,
போராடி வந்திருக்கிறார்கள் என்பதை இந்த நாடு மட்டுமல்ல, உலகமே பார்த்துக்
கொண்டுதானிருக்கிறது. அவர்களை சந்திக்கக்கூட மனமில்லாமல் இந்நாட்டின்
பிரதமர் எந்தளவிற்கு காலத்தை கடத்தி வந்திருக்கிறார் என்பதுவும் நாடறிந்த
செய்தி. இப்படி இருக்கையில், கடந்த மூன்று மாதங்களாக காவேரி மேலாண்மை
வாரியம் அமைப்பது பற்றிய செய்திகளை நாம் நாள்தோறும் தொடர்ந்து கூர்ந்து
கவனித்து வருகிறோம். தமிழகம், இந்த விடயத்தில், மத்திய அரசால், கடுமையான
விரோதப்போக்கை சந்தித்து வந்திருக்கிறது என்பது சொல்லித்தெரியவேண்டிய
அவசியமில்லை. நம் மாநில அதிமுக அரசும், இதில் மேம்போக்காக இருந்திருக்கிறது
என்பதுதான் நிதர்சனமான உண்மை.
கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதியே,
காவிரிநதிநீர் பங்கீடு குறித்து உச்சநீதிமன்றம், தெளிவான தீர்ப்பை
வழங்கியது. நாம் கேட்ட நீரின் அளவை விட குறைத்து விட்டது என்பது நம்
எல்லோருக்கும் ஏமாற்றம் என்றாலும் கூட, காவேரி மேலாண்மை வாரியம்
அமைக்கப்படவேண்டும் என்றும், 15 ஆண்டுகளுக்கு, இது குறித்து எவ்வித மேல்
முறையீடும் கூடாது என்றும் ஆறு வாரங்கள் அதற்கான காலஅவகாசம் கூட
நிர்ணயித்து, தீர்ப்பு வழங்கியது. ஆனால், ஆறு வாரங்கள் கடந்த நிலையில்,
கடைசி நாளன்று, மத்திய அரசு, ஸ்கீம் என்பதற்கு பொருள் விளங்கவில்லையென்று
கூறி மறுபடியும் தங்களுடைய வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்வதற்கு
நான்கு வார கால அவகாசம் வேண்டுமென்று கூறியது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment