சங்க இலக்கியங்களாக அறியப்படும் பாட்டும்
தொகையும் ஆன பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்களுள், எட்டுத்தொகையுள்
எட்டாவதாகிய இலக்கியம் புறநானூறு. இந்த நூலில் முடியுடைக் காவலரும்
முத்தமிழ்ப் பாவலராக தமிழை வளர்த்த காலத்திலும்; கற்றறிந்த புலவரும்
புவியாண்ட புரவலரும் தமிழைப் போற்றிய காலத்தில் நிகழ்ந்தவையாக 400 பாடல்கள்
தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஆண்பாற் புலவர்களும், அரசர்களும் யாத்த
பாடல்கள் மட்டுமன்றி, அரசமகளிரான பெருங்கோப்பெண்டும், பாரியின் மகளிரும்
பாடிய பாடல்களுண்டு. அவ்வாறே, குறமகள் பாடியதாகவும் பாடலுண்டு.
குயவர்மகள் பாடியதாகவும் பாடலுண்டு. பாடல்கள் யாவும் சங்ககாலத் தலைவர்களின்
படைத்திறத்தையும் கொடைத்திறத்தையும் நமக்கு இன்று அறியத் தருகின்றன.
எடுத்துக்காட்டாகக் கீழ்க்காணும் இரு சிறு பாடல்களைக் காணலாம்.
கொடைத்திறமும் …
“பாரி பாரி யென்றுபல வேத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி யொருவனு மல்லன்
மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே.” (புறநானூறு: 107)
(பொருள்: “பாரி, பாரி” என்று பாரி ஒருவனே
கொடையிற் சிறந்தவனாகவும் உலகைக் காப்பவனாகவும் புலவர் பலரும் புகழ்ந்து
பாடுகிறார்கள். பாரி மட்டுமல்ல மழையும் தன் கொடையால் உலகைக் காக்கிறது.)
படைத்திறமும்…
“நெல்லும் உயிர்அன்றே; நீரும் உயிர்அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான்உயிர் என்ப தறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.” (புறநானூறு: 186)
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment