கடந்த காலங்களில், நாம்
சொல்லிக்கொண்டிருந்தது என்னவென்றால், பெண்களுக்கு பாதுகாப்பில்லை,
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதைத்தான்
வலியுறுத்திக்கொண்டும் இருந்தோம். ஆனால், தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக
அல்லவா சென்று கொண்டிருக்கிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்
என்பது போக, இந்த பா.ச.க ஆட்சி, பெண்குழந்தைகளை பாதுகாப்பது என்பதை
கேள்விக்குறியாக்கி வைத்திருக்கிறது என்பதுதானே நிதர்சனமான உண்மை.
கடந்த மாதத்தில், உத்திர பிரதேச
மாநிலத்தில், ஒரு 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறாள்,
அதற்கு காரணமானவர், அந்த மாநில அமைச்சரவையில் அமர்ந்திருக்கும் ஒரு
எம்.எல்.ஏ என்பது நம் எல்லோருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அதிலும்,
தங்களுக்கு நியாயம் வேண்டி போராடிய அந்த குடும்பத்தைத் தாக்கி, அந்தப்
பெண்ணின் தந்தையை விசாரணை என்ற பெயரில் கொன்றிருக்கிறார்கள் என்ற செய்தி
நம்மை அதிக வேதனைக்கு உள்ளாகியது. அதில் இருந்து மீண்டு வருவதற்குள்,
காசுமீரில், ஆசிபா என்ற 8 வயது இசுலாமிய ஆடு, மாடு மேய்த்து பிழைக்கும்
நாடோடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி, கோவிலுக்குள் அடைத்து வைத்து, 8
நாட்கள் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டிருக்கிறாள் என்ற செய்தியை நம்
எல்லோரையும் உலுக்கி எடுத்துவிட்டது. அது மட்டுமல்ல, இந்த வெறி செயலுக்கு
பின்னாலும், பா.ச.க பிரமுகர்கள் இருக்கின்றனர். அங்கு குடியிருக்கும்
இசுலாமிய குடும்பங்களை வெளியிருவதற்காக, செய்யப்பட்டசெயல் என்று
சொல்லப்படுகிறது. மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, உணவின்றி, நீரின்றி, 8
நாட்கள் 8 பேர்களால், (தேட வந்த காவல்துறையைச் சேர்ந்த நபர் உட்பட) பாலியல்
வன்புணர்வு செய்யப்பட்டு, காலை வளைத்து, உடைத்து, விலா எலும்பை உடைத்து,
தலையில் கல்லால் அடித்து கொன்றிருக்கிறார்கள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment