நக்கீரர் கடைச் சங்க புலவர் ஆவார். இவர்
இறையனார் பாடலில் குற்றம் கண்டுபிடித்தவர். இவர் திருமுருகாற்றுப்படை, கைலை
பாதி காளாத்தி பாதி காளத்தி அந்தாதி, இறையனார் அகப்பொருள் உரை,
திருவீங்கோய் மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை,
திருவெழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப்பிரசாதம், காரெட்டு,
போற்றிக்கலிவெண்பா, திருக்கண்ணப்பத் தேவர் திருமறம் போன்றவற்றை இயற்றியவர்.
மேலும் இவர் பாடியனவாக நற்றிணையில் ஏழு பாடல்களும், குறுந்தொகையில்
எட்டுப் பாடல்களும், அகநானூற்றில் பதினேழு பாடல்களும், திருவள்ளுவமாலையில்
ஒன்றும் அமைந்துள்ளன. இவரைப் பற்றி சேய்த்தொண்டர் புராணத்தில் ஒரு புராணம்
பாடப்பெற்றுள்ளது. இப்புராணம் இவரின் வரலாற்றையும் இவரின் படைப்புகளையும்
இணைத்துப் பாடப்பெற்றுள்ளது. அப்புராணம் தரும் செய்திகளை ஆய்வு நோக்கில்
தருவதாக இக்கட்டுரை அமைகிறது.
சேய்த்தொண்டார் புராணம் என்பது முருகத்
தொண்டர்களின் வரலாறுகளைத் தொகுத்துப் பாடும் புராணம் ஆகும். முருகவேள்
பன்னிரு திருமுறை என்ற தொகுப்பினடிப்படையில் பன்னிரண்டாவது திருமுறையாக இது
அமைகிறது, இதனை இயற்றியவர் தேனூர் வரகவி சொக்கலிங்கனார் ஆவார்.
இப்புராணத்தில் அறுபத்தாறு தனியடியார்களின் வரலாறும், பன்னிரு தொகை
அடியார்களின் வரலாறும் இணைத்துப் பாடப்பெற்றுள்ளன. இது நிலம் என்ற சொல்லில்
ஆரம்பித்து நிலம் என்ற சொல்லில் முடிக்கப்பெற்றுள்ளது. இதனுள் நக்கீரர்
வரலாறு ஆறாவது புராணமாகக் காட்டப்பெற்றுள்ளது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment