(நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு)
ஆட்சி அதிகாரக் கல்வி பார்ப்பனர்களுக்கு
மட்டுமே அளிக்கப்பட்ட நிலையை எதிர்த்து, பார்ப்பனர் அல்லாதவர்கள்
போராடியதன் விளைவாக ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்குக் கல்வியிலும், அரசு
வேலை வேலைகளிலும் வாய்ப்பு கிடைக்கத் தொடங்கியது. அவ்வாறு வாய்ப்பு
கிடைத்த உடனேயே ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் பார்ப்பனர்களை விடத்
திறமைசாலிகள் என்று மெய்ப்பிக்கப்பட்டு விட்டது. இதனால் கதிகலங்கிப் போன
பார்ப்பனர்கள் நாம் ஆட்சி அதிகாரக் கல்வி பெறுவதை எப்படியும் தடுத்து விட
வேண்டும் என்று துடியாய்த் துடித்துக் கொண்டு இருந்தார்கள். (இன்னும்
அப்படியே தான் இருக்கிறார்கள்.)
இந்நிலையில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை
“இந்தியர்களிடம்” (அதாவது பார்ப்பனர்களின் நேரடி ஆட்சியில்) விட்டு விட்டு
வெளியேறினார்கள். ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறிய உடனேயே, நாம்
பெற்றுக் கொண்டு இருந்த கல்வி வழியை அடைக்கும் பணியை அவாள் தொடங்கி
விட்டார்கள்.
தமிழ் நாட்டில் இராஜாஜி குலக்கல்வித்
திட்டத்தைக் கொண்டு வந்தார். இதன் மூலம் அதிகார வேலை வாய்ப்புகளில்
ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் பார்ப்பனர்களுக்குப் போட்டியாக வருவதைக்
கிள்ளி எறிய முயன்றார். ஆனால் பெரியாரின் கடுமையான போராட்டத்தின் முன்
தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடி விட்டார். அதன் பின் பெருந்தலைவர் காமராசர்
பொறுப்பேற்ற உடன் தமிழகத்தில் அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெறும்
வண்ணம் கிராமப் புறங்களில் பள்ளிகளைத் திறக்கும் திட்டத்தை வரைந்து கொண்டு
வருமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment