புத்தரைப் பற்றி நமக்குக் கிடைக்கும்
செய்திகளில் பெரும்பாலானவை உண்மைக்கு மாறானவையே. அவர் ஒரு பரம நாத்திகர்.
ஆனால் அவர் திருமாலின் ஒன்பதாவது அவதாரம் என்று கதை கட்டிக் கொண்டு
இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர் ஒரு முரணற்ற லோகாயதவாதி அதாவது
பொருள் முதல்வாதி. ஆனால் அவர் பெயரில் கணக்கற்ற ஆன்மீகக் கதைகள் உலவிக்
கொண்டு இருக்கின்றன.
புத்தர் துறவியாவார் என்று சோதிடர்கள்
சொன்னதால், அவ்வாறு ஆகி விடாமல் தடுக்க அவரை வெளி உலகமே தெரியாமல்
வளர்த்ததாக நமக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். அவர்
எதேச்சையாக ஒரு நாள் ஒரு பிச்சைக்காரனைப் பார்த்ததாகவும், இன்னொரு நாள்
நோயாளி ஒருவரைப் பார்த்ததாகவும், இன்னொரு நாள் மரணம் எய்திய ஒரு மனிதனைப்
பார்த்ததாகவும் அவற்றின் மூலம் இவ்வுலகின் “நிலையாமைத்” தத்துவத்தைப்
புரிந்து கொண்டதாகவும் நமக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து
இருக்கிறார்கள். உலகின் நிலையாமையைக் கண்டு “மனம் கலங்கிய” அவர் இதற்கு
விடை தேடும் பொருட்டுத் துறவு பூண்டார் என்றும், அதன் பின் ஒரு நாள் போதி
(அரச) மரத்தடியில் திடீரென ஞானம் உதித்ததாகவும், தர்க்கவாதத்திற்குச்
சற்றும் பொருத்தம் இல்லாத கதையை வலுக்கட்டாயமாக மக்களின் மனங்களில்
திணித்து வைத்து இருக்கிறார்கள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment