Tuesday, 19 June 2018

எத்துணை மகள்களை இழப்பது ?


Siragu-eththunai1
எத்துணை மகள்களை தமிழ்நாடு இழந்து விட்டது? எந்த மண்ணில் பெண்ணடிமையை எதிர்த்து ஒரு பெரும் போர் நிகழ்த்தி தந்தை பெரியார் வெற்றி பெற்றாரோ, அந்த மண்ணில் கனவுகளைச் சுமந்த பறவைகளை நாம் ஈவு இரக்கமின்றி கொன்று போட்டிருக்கின்றோம். ஒவ்வொரு பறவையும் குறிபார்த்து அம்பெய்து கொல்லப்பட்ட பறவைகளே. வறுமையில் உழன்றாலும், அந்த வறுமையை ஒழித்து விடலாம் என்று கண் துஞ்சாது படித்து, கனவுகளை நெஞ்சிற்குள் அதன் நெருப்பின் தகிக்கும் தன்மை மாறாது காத்து வைத்து, உணவின்றி இளைத்தாலும், உணர்வுகளை இளைக்கவிடாது, உறுதியோடு படித்து வெற்றி பெற்ற அனிதாவை, தூக்கு கயிற்றுக்கு தூக்கிக் கொடுத்தோம். குடும்ப சூழ்நிலை ஒருபோதும் ஒரு குழந்தையை முன்னேற தடுத்திடக் கூடாது, பள்ளிக் கல்வி படித்து வந்து விட்டால் போதும், மதிப்பெண் அடிப்படையில் எப்படியேனும் மருத்துவமோ, பொறியியலோ படித்து கனவினை மெய்ப்பித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று இருந்த கட்டமைப்பை, ஒரு நூற்றாண்டாய் தலைவர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய உரிமைத் தளங்களை எல்லாம் ஓர் நொடியில் இழந்து நிற்கின்றது தமிழ்நாடு. 

இவனும் சரியில்ல அவனும் சரியில்ல என்ற புரியாத எலைட் குரல்கள் நடுத்தர மக்களை, அடித்தட்டு மக்களை குழப்பி, இருந்த ஓட்டைக் கோட்டையையும் இடித்துத் தள்ளி அரசியல் அனாதைகளை நிற்கின்றோம். ஈழத்தில் தலைவர் பிரபாகரன் அவர்கள் தேர்தலுக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்று எடுத்த முடிவே ராஜபக்க்ஷே எனும் இன அழிப்பாளனை அதிபராக்கியது. இந்த புரிந்துணர்வு இல்லாமல் தமிழ்நாட்டையும் இந்திய பார்ப்பனிய பனியா அரசு உள்நுழைந்து அழித்திட நாமே வழிவகை செய்தாகி விட்டது. மருத்துவ கட்டமைப்பில் நீட் கொண்டு வந்து பொது சுகாதார கட்டமைப்பை அவர்கள் சிதைத்ததை உணர இன்னும் சில நாட்களே இருக்கின்றன. அனிதாவை தொடர்ந்து மீண்டும் இந்த ஆண்டும் நீட்டின் தோல்வி தாங்க முடியாமல் பிரதிபா எனும் மாணவியை இழந்தோம். இவர்கள் அனைவருமே மருத்துவர் ஆகக் கூடிய வாய்ப்பு தமிழ் நாட்டில் ஏற்படுத்தி வைத்திருந்தது சமூக நீதி அரசியல் களங்கள். இந்த இழப்புகளுக்கு நம்மை ஆற்றுப்படுத்த இயலாமல் விழி மூடி வலிகளை கடக்கின்றோம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment