டாக்டர் ஜி.யு. போப் (1820-1908)
ஆராய்ந்து குறிப்புக்கள் எழுதிய புறநானூறு மூலமும் உரையும் நூல்,
பேராசிரியர் திருமணம் செல்வக் கேசவராயர் முதலியாரால் பயன்படுத்தப்பட்டது.
இந்த நூலைச் செல்வக் கேசவராயரின் பேரன் தி. நம்பிராசன் மறைமலையடிகள்
நூல்நிலையத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இந்த நூலைத் தமிழ் இணையக்
கல்விக்கழகம் (Tamil Virtual Academy) ஒளிவருடிய படக்கோப்பு வடிவில்
(scanned PDF document) இணையத்தில் வழங்கியுள்ளது:
(http://www.tamilvu.org/library/nationalized/scholars/pdf/others/tcl/dr_gu_pope_purananuru.pdf).
இந்த புறநானூறு மூலமும் உரையும் நூல், உ.வே.சா. அவர்களால் வே. நா. ஜூபிலி
அச்சுக்கூடத்தின் வழியாக 1894 ஆம் ஆண்டு வெளியிடப்பட முதற்பதிப்பு ஆகும்
(இதன் விலை 4 ரூபாய்).
இந்த நூலில் ஜி.யு. போப் குறிப்புக்கள்
எழுதியுள்ள விதம், அவரது ஆழ்ந்து படிக்கும் முறைக்கும் தமிழார்வத்திற்கும்
சான்றாக உள்ளது. நூல் முழுவதும் ஒரு பக்கம் விடாது அவரது குறிப்புக்கள்
நிரம்பியுள்ளன. இது மிகைப்படுத்துதல் அல்ல, மெய்யாகவே அவர் ஒரே ஒரு
பக்கத்தையும் கூட குறிப்பின்றி விட்டுவைத்தாரில்லை!!! புறநானூற்றுப்
பாடல்களுக்கு அவர் குறிப்பெடுத்துக் கொண்ட முறை குறித்து கண்டவை இங்கே
கொடுக்கப்படுகிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment