பண்டமாற்று
தம்மிடம் உள்ள பொருள்களைக் கொடுத்து
அவற்றிற்குப் பதிலாக வேறு பொருட்களைப் பெற்றுச் செல்லும் முறையாகிய
பண்டமாற்று முறை அக்காலத்தில் வழக்கிலிருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது.
பரதவர்கள் மீன் குவியல்களை
இடையர்களுக்குக் கொடுத்துவிட்டு, அவற்றிற்குப் பதிலாக அவர்களிடமிருந்து
சீவல், கௌதாரி போன்றவற்றைப் பெற்றுச் சென்றமையையம். நெய்தல் நிலச்
சிறுமியர் இடைச்சியர்களிடமிருந்து அவரைக்கு ஈடாகப் பவளத்தைப் பெற்றுச்
சென்றமையையும்,
கவரும்மீன் குவைகழியவர் கானவர்க் களித்துச்
சிவலும்சே வலும்மாறியும் சிறுகழிச் சியர்கள்
அவரைஞ னலுக்கெயிற்றியர் பவளமுத் தளித்தும்
உவரிநெய் தலும் கானமும் கலந்துள ஒழுக்கம்.
என்ற பாடல் மூலம் அறியமுடிகிறது.
சமய வழக்கங்கள்
சமுதாயத்திலுள்ள நிறுவனங்களில் ஒன்றாகிய சமயம் தொடர்பான வழக்கங்களைத் திருமுறைகள் மூலம் அறியமுடிகின்றது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment