மரணம் வலி மிகுந்தது என்பதில் மாற்றுக்
கருத்தில்லை. ஆனால் சில மரணங்கள் என்றென்றும் அச்ச அதிர்வலைகள் தரும்
வல்லமை மிக்கது. ஒரு நொடி நம்மை அந்த நிலையில் சிந்தித்துபப்
பார்க்கும்போது உயிர் வரை நடுக்கத்தை உணர முடியும். கண்ணிமைகளால் கூட
துயரத்தின் வலியை அறிய முடியும், அப்படி ஒரு மரணம்தான் கூடைப்பந்து வீரர்
Kobe Bryant மற்றும் அவரின் 13 வயது மகள் Gianna விற்கு நடந்தது. அவர்களோடு
இன்னும் 7 பேர் அந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து போனார்கள். Kobe Bryant
தன் சிறு வயது முதலே கூடைப்பந்தில் ஆர்வம் கொண்டு விளையாடி 5 முறை தான்
விளையாடிய Lakers அணிக்காக வெற்றியை ஈட்டித் தந்து championship வென்றவர்.
அவருடைய மகள் 13 வயது Gianna தன் தந்தையைப் போலவே கூடைப்பந்தாட்டத்தில்
முன்னனி வீராங்கனையாக திகழ்ந்தார்.
Kobe Bryant இன் இந்த மரணம் பல
அதிர்வலைகளை அவர் ரசிகர்கள், நண்பர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இந்த
செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் ஒரு
செய்தியை கவனிக்க நேரிட்டது. Gianna வோடு சேர்த்து Kobe – க்கு 4 மகள்கள்.
அவரின் கடைசி மகளுக்கு இப்போது தான் 7 மாதங்கள். ஒரு பேட்டியில் Kobe
Bryant – யிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்படுகின்றது. உங்களுக்குப் பின்
உங்கள் கூடைப்பந்தாட்ட முறைகளைக் கொண்டு செல்ல ஒரு மகன் வேண்டாமா? அப்போது
அவர் மகள் Gianna அருகில் இருந்து “நான் இருக்கிறேன்”(I am there to carry
the legacy of my father. Son is not needed for that) என்று பதில்
கொடுத்தாராம். அந்த வீரங்கனையையும் நாம் இந்த விபத்தில் இழந்தோம் என்பதே
வேதனை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment