ஜெயகாந்தனின் படைப்புகளில் இடம்பெறும்
மாந்தர்கள் உண்மையில் நடமாடும் மக்களைப்போல காட்சியளிக்கின்றனர். உண்மை
மக்களுக்காக வருந்தி கண்ணீர் விடுவது போல் அவர்களுக்காகப் படிப்பவர்கள்
கண்ணீர் விடுகின்றனர். அவ்வாறே சினம் கொள்கின்றனர், வெறுக்கின்றனர்,
மகிழ்கின்றனர். கற்பனை மாந்தர் உயிரும் உணர்ச்சியும் மிக்க வாழ்வு பெறுமாறு
ஜெயகாந்தன், தனது பாத்திரங்களை படைத்துக் காட்டியுள்ளார்.
புதிய வார்ப்புகள் எனும் சிறுகதைத்
தொகுப்பு ஜெயகாந்தனின் சிறந்த சிறுகதைத் தொகுப்புகளுள் ஒன்றாகும். இக்கதைத்
தொகுப்பில் அமைந்துள்ள கதைகளில் உள்ள பாத்திரங்கள் நடப்பியல் சார்ந்த
மனிதர்களாகவே விளங்குகின்றனர். குறிப்பாக புதிய வார்ப்புகள் என்ற கதையில்
இடம்பெறும் பாத்திரங்கள் பற்றிய செய்திகளை இக்கட்டுரை ஆராய்ந்து
தருகின்றது.
இந்து
இந்து, இவள் புதியவார்ப்பு சிறுகதையின்
தலைமைப்பாத்திரம் ஆவார். இவள் தன்னை புதிய வார்ப்பாய் வார்த்துக்கொள்வதால்
தன் குடும்பம் மற்றும் சமூகத்தையும் புதிதாய் வார்க்கும் சிற்பியாகிறாள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment