“அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு
செங்கல் இல்லை, மரம் இல்லை, சொறிகல் என்ற பூராங்கல் இல்லை, மொத்தமும்
கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு
கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின்
நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த
அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி இறக்கினர்,
எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன
கணக்கு.”
என இவ்வாறாக வியப்புக்குறியுடன் துவங்கும்
கட்டுரை “பிரகதீஸ்வரம் – அதுவே விஸ்வரூபம்” என்ற தலைப்பில் ‘எழுத்துச்
சித்தர்’ என்று குறிப்பிடப்படும் பாலகுமாரன் அவர்களால் பத்தாண்டுகளுக்கு
முன்னர், அதாவது, தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாட்டக்
காலத்தில் எழுதப்பட்டு, அது நாளேட்டிலும் வெளியானது [1] (மீண்டும் அண்மைய
தஞ்சைப் பெரியகோயில் குடமுழுக்கு நிகழ்வின் பொழுது, மறைந்த எழுத்தாளர்
பாலகுமாரனின் இதே கட்டுரையை “ராஜராஜனின் விஸ்வரூபம், தஞ்சைப் பெருவுடையார்
கோயில்: நடிகர் சிவகுமாரின் எழுத்தோவியம்” என்ற தவறான ஒரு தலைப்பில்
சிவகுமார் எழுதியதாகத் தினமணி வெளியிட்டது [2] என்பது இங்கு கட்டுரை சொல்ல
விரும்பும் கருத்துக்கு அப்பாற்பட்டது).
இக்கட்டுரையில் பாலகுமாரன், “மாமன்னர்
ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா? கலைஞர்கள் செய்திறனா?
இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர
வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப
நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர
பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர்,” என்றும்
குறிப்பிடுகிறார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment