தகுதி அடிப்படை என்ற பொருந்தாவாதத்தை
அன்பழகன் நல்லதொரு உவமையுடன் தெளிவாக விளக்குகிறார். ஊர்மக்களுக்குப்
பொதுவான விளைநிலத்தில் அனைவரிடம் இருந்தும் விதைநெல் பெற்று, விதைத்து,
பயிர் விளைவித்த பின்னர், விளைச்சலைத் தக்க முறையில் பங்கிடாது, அவரவர்
திறமைக்கும் வலுவுக்கும் ஏற்ப அறுவடை செய்து கட்டிக் கொண்டு போங்கள் என்று
கூறுவோமானால், அறம் எதுவெனத் தெரிந்தவர் அதை ஏற்றுக்கொள்ள வழியில்லை
என்கிறார் (பக்கம் – 64). ஆனால் கல்வித்துறைக்காகச் செலவிடும்வரிப்
பணத்திற்கு அதுதான் அப்பொழுது விளைவாக இருந்திருக்கிறது. இந்த சுரண்டல்
முறையை அநீதி என்று உணர்ந்தவர் வெகு சிலரே. அரசு குடியானவனின் தெரு
கடைத்தேங்காயை எடுத்துச் சென்று அக்கிரகார தெரு பிள்ளையார் கோவிலில்
உடைத்துக் கொண்டிருப்பது போல நிர்வாகம் செய்துள்ளனர் என்கிறார் அன்பழகன்.
உண்மையில் பார்ப்பன வகுப்புரிமைக்கான
வாய்ப்பை அவர்கள் இழக்கவில்லை என்பதைத்தான் தரவுகள் காட்டுகிறது.
இத்தரவுகளைக் கொடுத்த அன்பழகன் சதவிகித எண்களையும் அடைப்புக்குறிக்குள்
கொடுத்திருக்க வேண்டும், அப்பொழுதுதான் நூலைப் படிப்பவர் கணக்குப் போட
வேண்டிய தேவையின்றி ஒரு பார்வையிலேயே வகுப்புரிமை நிலையை அறிந்து கொள்ள
உதவியாக இருந்திருக்கும். தரவுகள் குறித்து அன்பழகன் தனது நூலில் ஒரு
கேள்வியை எழுப்பாமல் விட்டாலும்.. தரவுகளைப் பார்வையிட்ட பிறகு நமக்கு
எழவேண்டிய கேள்வி… தகுதியும் திறமையும் உள்ளவர் என்று தொழிற்கல்வியை
1940களில் ஆக்கிரமித்த இந்தப் பிரிவினரிலிருந்து அப்துல்கலாம் போல எத்தனை
விஞ்ஞானிகளை நாம் இவர்களிலிருந்து அடையாளம் காட்ட முடியும்? தரவுகள்
காட்டும் காலகட்டத்தில் பள்ளியில் பயிலும் மாணவராகவே கலாம்
இருந்திருப்பார். இவர்கள் அவருக்கும் மூத்த தலைமுறையினர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment