குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கடந்த இரண்டு மாதங்களாக அறவழியில் அமைதியாகப் போராடிவந்த தலைநகர் தில்லி மக்கள், இன்று திடீரென்று தாக்குதலுக்கு உட்பட்டிருக்கிறார்கள் என்பதில், உலக அரங்கில் நாம் எல்லோரும் இந்தியர்கள் என்ற வகையில் மிகவும் வெட்கப்படவேண்டியவர்களாக, தலைகுனிந்து நிற்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பது வருந்தத்தக்க ஒரு நிகழ்வாக நடந்திருக்கிறது. வடகிழக்கு தில்லியில், கடந்த மூன்று தினங்களாக நடந்த வெறித்தனமான வன்முறையில் இதுவரை ஒரு தலைமை காவலர் உட்பட 38 பேர்கள் உயிரிழந்துள்ளனர். 300 பேர்களுக்கும் மேலாக காயமடைந்துள்ளனர் என்ற செய்தி நம்மை மிகவும் வேதனைக்குள்ளாக்க வைக்கிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு
ஆதரவாக போராட்டம் நடத்துகிறோம் என்ற பெயரில் சில இந்துத்துவ அமைப்புகள்,
வடகிழக்கு தில்லியிலுள்ள மாஜ்பூர், ஜபராபாத், சீலம்பூர், சந்த்பாக் ஆகிய
இடங்களில் தங்களின் போராட்டத்தை நடத்தின. அதில், இச்சட்டத்திற்கு
எதிராகவும், ஆதரவாகவும் போராடிய இரு தரப்பினர்கிடையே வன்முறை வெடித்தது.
அதில், ஆதரவாக போராடியதாக கூறப்படுவோர், கண்ணில் பட்டவற்றையெல்லாம் அடித்து
நொறுக்கினர். தீ வைத்து கொளுத்தினர். கடைகள், வீடுகள், கார்கள் என
அனைத்தும் நாசமாக்கப்பட்டன. இவையனைத்தும் மத சிறுபான்மையினரான இசுலாம்
மக்களை குறிவைத்தே தாக்கப்பட்டன. அதிகப்படியான அராஜகங்கள் நடந்தேறியது.
தாக்கப்பட்டவர்களை அழைத்துச்செல்லும் ஆம்புலன்ஸ் கூட மருத்துவமனைக்குச்
செல்ல முடியாதபடி அடித்து வழிமறிக்கபட்டன. வீடு புகுந்து உள்ளே இருக்கும்
இசுலாமிய மக்களைத் தாக்கியிருக்கிறார்கள். இது எல்லாம் முன்னரே திட்டமிட்டு
செயல்படுத்தப்பட்டிருக்கிறது. முன்கூட்டியே இசுலாம் வீடுகள் அடையாளம்
கண்டு வைத்துக் கொண்டு, கலவரம் போது, மிகச்சரியாக அவர்களின் இல்லங்கள்
மட்டும் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. தீக்கிரையாக்கப்
பட்டிருக்கின்றன. மசூதிகளும் இதற்குத் தப்பவில்லை. தீவைக்கப்பட்டு, உள்ளே
புனித நூல்கள் உட்பட அனைத்தும் எரிக்கப் பட்டிருக்கின்றன. சிசிடிவி
கேமராக்கள் உட்பட உடைத்து ஒரு கொடூர வன்முறையை இசுலாம் மக்கள் மீது
ஏவிவிடப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment