Thursday, 5 March 2020

தொடரடைவு


Siragu tamil in computer2
ஒரு மொழி வளரக் கணினியின் துணை என்பது இப்போது அத்தியாவசியமாகி விட்டது. குறிப்பாக இணையப் பரவல் என்பதும் மொழியின் வளர்ச்சிக்குத் துணை புரிவதாக உள்ளது. அகராதிகள் பல வகைகளில் தற்போது இணைய வழி கிடைக்கின்றன. தமிழ்மொழிக்கான அகராதிகளும் பல நிலைகளில் இணையவழி கிடைக்கின்றன. தமிழ்த் தொடரடைவுகள் மதுரையைச் சார்ந்த கணிதத்துறைப் பேராசிரியர் முனைவர் ப. பாண்டியராஜா என்பவர் உருவாக்கிய தமிழ் கன்கார்டன்ஸ் (http://tamilconcordance.in/) ஒரு சிறந்த தளமாக விளங்குகின்றது. இதனுள் பல இலக்கியங்கள் தொகுக்கப்பெற்று அவற்றில் இருந்து சொல்சொல்லாக தொடர் தொடராகத் தேடி அந்த சொல், அந்தத் தொடர் எந்த இலக்கியத்தில் எந்த இடத்தில் வருகிறது என்பதைக் காட்டுவதாக உள்ளது. இது ஆய்வாளர்களுக்கு மிகத் தேவையான நல்ல இணைய தளம். இதன்வழி ஆய்வாளர் வெகு சீக்கிரமாக தான் தேட வேண்டிய வார்த்தை, அல்லது தொடர்களை உடன் பெற இயலும். ஒரு பொருள் குறித்துக் கட்டுரை வரைவோர் அச்சொல் இத்தளத்தில் இட்டு அது எந்நத எந்த இலக்கியத்தில் உள்ளது என்றை அறிந்து கொள்ள இயலும்.
தொடர் அடைவு (concordance)

ஒரு இலக்கியத்தில் அல்லது ஒரு படைப்பாளர் எழுதிய படைப்புகளில் ஒரு குறிப்பிட்ட சொல் எவ்வகையில் பயன்படுத்தப்பெற்றுள்ளது என்பதை அகரவரிசைப்படி இடம் பெற்றுள்ளத் தொடராகக் காட்டுவது தொடர் அடைவு (a book or document that is an alphabetical list of the words used in a book or a writer’s work, with information about where the words can be found and in which sentences) எனப்படுகிறது. ஆங்கில இலக்கியத்திற்குப் பல்வேறு தொடரடைவுகள் இணைய அளவில் உள்ளன. தமிழில் முனைவர் பா. பாண்டியராஜா உருவாக்கிய தொடரடைவு தமிழ் ஆய்வு உலகிற்குப் பெரிதும் பயன்படுவதாக உள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment