“வகுப்புரிமைப் போராட்டம்” என்ற நூல் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களால்
1951 ஆம் ஆண்டில்எழுதப்பட்டு, மக்கள் மன்றம் பதிப்பாக வெளியிடப்பட்ட நூல்.
அண்மையில் காலமான, இனமான பேராசிரியர் என அழைக்கப்பட்ட பேராசிரியர் க.
அன்பழகன் 1944 முதல் 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப்
பேராசிரியராகப் பணியாற்றியவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த
தலைவர்களில் ஒருவராக தி.மு.க. உருவான நாள் முதல் அதன் உறுப்பினராகவும்,
1977 முதல் 2020இல் இறக்கும் வரை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவின்
பொது செயலாளராகவும் இருந்துள்ளார். தமிழகத்தின் நிதி, கல்வி ஆகிய துறைகளின்
அமைச்சராகவும் பணியாற்றியவர். சட்டமன்ற உறுப்பினராக ஒன்பது முறையும்,
நாடாளுமன்ற உறுப்பினராக ஒரு முறையும், சட்டமன்ற மேல்சபை உறுப்பினராக ஒரு
முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டு நீண்ட அரசியல் பங்களிப்பைச் செய்தவர்.
இந்த நூலை எழுதிய காலத்தில் க.அன்பழகன்
ஒரு ஆறேழு ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றியவராகவும், திராவிட
கொள்கைகளில் ஊறிப்போன 30 வயதுக்கும் குறைவான இளைஞராகவும் இருந்துள்ளார்
என்பது தெரிகிறது. புள்ளிவிவரங்கள், தரவுகள் நிரம்பப் பெற்ற நூலாக
இருப்பினும் நூலின் நடை எளிமையாகவும் உள்ளது. வகுப்புரிமை கொள்கைக்காகப்
போராடிய தமிழகத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் ஒரு வரலாற்று ஆவணம் என்றே
இந்நூலை வகைப்படுத்த முடியும். தமிழக ஆசிரியப்பணியில் இருப்போர் வரலாற்று
அடிப்படையில் அறிந்திருக்க வேண்டிய நூல் இது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment