சாக்ரடீஸ் உலக தத்துவ ஞானிகளின் தந்தை. ஏதென்ஸ் நகரின் ஏற்றமிகு தலைவர். வாலிபர்களை, இளைஞர்களைச் சிந்திக்கத் தூண்டினார் என்ற குற்றத்திற்காக ஒரு கோப்பை நஞ்சு கொடுத்துக் கொல்லப்பட்டவர். அந்தத் தந்தை, தன்னை தப்பித்துப் போகும்படி தன் தோழர்கள் கட்டாயப்படுத்தியபோதும், அதற்கான வழிகள் இருந்த போதும் அதை விரும்பாது, அந்த தண்டனையை ஏற்றுக்கொண்டு தன் மரணத்தின் வாயிலாக இந்த மக்கள் உணர்வு பெற்று சிந்திக்கத் தொடங்குவார்கள் என்று எண்ணி அந்த நஞ்சு கோப்பையை விரும்பி குடித்து தன் உயிரை மக்களின் அறிவுத் தூண்டலுக்காக மகிழ்ச்சியாக உரமாக்கியவர்.
வரலாறு ஏதென்ஸ் நகரத்திற்கு ஒரு
அறிவுத்தந்தையை ஈன்றது போல தமிழ்நாட்டிற்கும் காலம் ஈன்ற அறிவுத் தந்தை
தான் பெரியார். ஏதென்ஸ் நகர நீதிமன்றம் சாக்ரடீஸ்க்கு நஞ்சு குடிக்க
வேண்டும் என்று தண்டனை வழங்காமலிருந்திருந்தால் கிரேக்கம் பழம் பெருமைகளில்
இன்புற்று அழிந்து போயிருக்காது. ஒரு அறிவியக்கம் கண்டிருக்கலாம். அந்தக்
குறையை வரலாறு தமிழ் நாட்டின் மண்ணில் தீர்த்துக் கொண்டது தான் காலத்தின்
திருப்புமுனை. பெரியார் தோன்றினார். பழம் பெருமைகளைப் பேசவில்லை, புராண –
இதிகாசங்களின் பெருமை பேசவில்லை – கடவுள் பெருமை பேசவில்லை – அவர்
சமத்துவம் பேசினார். சக மனிதனை மதிக்கத் தடையாக இருக்கும் சாதி – மதம் –
கடவுள் ஒழிந்து போக வேண்டும் என்று பேசினார். அந்த பேச்சைப் போகிற போக்கில்
பேசிவிட்டுப் போகாமல் இயக்கமாகக் கட்டமைத்துப் பேசினார். இந்த தந்தை
தனக்கு வளமான வாழ்வு இருந்தபோதும் தன் மண்ணின் மக்கள் அடிமையாக இருக்கக்
கூடாது என்பதற்காக இறக்கும் வரை ஊர் ஊரக சுற்றி பரப்புரைச் செய்தார். உலக
அறிஞர்களின் சிந்தனைகளை எல்லாம் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுப்
பேசினார். தமிழ்நாடு சாக்ரடீசை அறிந்ததும் தமிழ்நாட்டின் அறிவியக்க
தந்தையின் வாயிலாகத் தானே!!
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/
No comments:
Post a Comment