புயலுக்குப் பின் அமைதி என்பர்
இங்கோ ஒரு பெரும் புயல்
மௌனமாகச் சுழன்றடிக்கிறது
வலியும் வேதனையும்
நாளை வரலாறு பதியும்
அதைப் படிக்க
நாம் இருப்போமா நாளை ?
தேவையான பொருட்களனைத்தும்
தேவைக்கு மீறி அள்ளப்படுகின்றன
ஒரு சிறு குடும்பத்திற்கு எட்டு
லிட்டர் எண்ணெய்;இருபது கிலோ அரிசி
நவுட்டப்படுகிறது ;
ஒரு நுண் கிருமி நுரையீரலோடு
சண்டையிட்டு மரணம் தர -இங்கோ
வீதிகளில் மக்கள் துவக்கிகளோடு
மலம் துடைக்கும் காகிதத்திற்குச்
சண்டையிடுகின்றனர் ;
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment