Wednesday, 30 September 2015

புதிய நந்தனும் பழைய நந்தனும்

nandhanaar4
சமூகத்தில் நம்மைச் சுற்றிக் காணப்படும் கொடுமைகளை இலக்கியப் படைப்பாளர்கள் பதிவுசெய்கின்றனர். அவற்றில் நமது கவனத்தைக் குவியச் செய்கின்றனர். சிலர் அக்கொடுமைகளுக்குத் தீர்வும் வழங்க நினைக்கின்றனர். இது காலம் காலமாக இருந்துவரும் நிகழ்வு.
nandhanaar5
மணிமேகலைக் காப்பியத்தை எழுதிய சீத்தலைச் சாத்தனார் ஒரு பெரும் புரட்சியாளர். எவரும் பசிக்கொடுமையால் வாடக்கூடாது என்று நினைத்தவர். வறுமையே எல்லாச் சமூகத் தீமைகளுக்கும் ஆதாரமாக இருக்கிறது என்று கண்டவர். ஆகவே ‘பசியைத் தீர்ப்பதே அடிப்படை மனித தர்மம்’ என்று நினைத்தார். ஆனால் அவரைச் சுற்றி அவர் கண்ட சமுதாய நிலையை அவரால் மாற்ற முடியவில்லை. அதற்குச் சரியான தீர்வும் அவருக்குத் தெரியவில்லை. எனவே கற்பனையான தீர்வு ஒன்றைத் தமது நூலில் அவர் வழங்குகிறார். அமுதசுரபி என்பதுதான் அக்கற்பனைத் தீர்வு. ஓர் அமுதசுரபி போன்ற பாத்திரம் இருந்து விட்டால், மணிமேகலை போன்ற ஒரு நல்ல பெண்மணியும் கிடைத்துவிட்டால் உலகிலுள்ள பசியையெல்லாம் போக்கிவிடலாம் என்பது அவர் கண்ட கனவு.

இதே பிரச்சினைதான் சென்ற நூற்றாண்டில் நமது தமிழ்நாட்டிலே பிறந்த வள்ளலாருக்கும். அவரும் பசியைத் தீர்ப்பது அடிப்படை மனித தர்மம் என்பதை உணர்ந்தவர்தான். அதனால் தினமும் சித்தி வளாகத்திற்கு வருவோர்க்காவது உணவிடவேண்டும் என்ற ஒரு ஏற்பாட்டினைச்செய்தார். யாவருக்கும் அன்புசெய்து அன்னமிடும் அமைப்புகளை நிறுவினால் சரியாகப் போய்விடும் என்று நினைத்தார். ஆனால் அதுவும் தோல்வியே ஆயிற்று.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Tuesday, 29 September 2015

முதல் சுதந்திர போராட்ட மாவீரர் பூலித்தேவர் – பகுதி-8



pulithevar1












ஒண்டி வீரன் குதிரையை, குதிரை லாயத்தில் இருந்து விடுவித்து புறப்படும்போது, அங்கு குதிரையின் சத்தம் கேட்டு வெள்ளையர்களின் வீரர்கள் வருகிறார்கள். அவர்கள் வந்த உடனே ஒண்டிவீரன் அவர்கள் கண்களில் படாமல் இருப்பதற்காக அங்கிருந்த வைக்கோல்களை தன் மீது போட்டுக்கொண்டு தரையில் படுத்து மறைந்து கொண்டார். அங்கு வந்த வெள்ளையர்கள், இந்த ஒரு குதிரை மட்டும் எப்படி குதிரை லாயத்திலிருந்து கயிற்றை அவிழ்த்து இங்கு வந்தது, இதனை இழுத்துச்சென்று கட்டிவிட வேண்டும் என்று குதிரையை இழுக்கின்றனர். ஆனால் உடனே, எதற்கு இந்த இரவில் அங்கு செல்ல வேண்டும், அதற்குப் பதில் இந்தத் தரையிலேயே ஒரு குதிரை லாயத்தை அரைந்து அந்த கம்பில் குதிரையைக் கட்டிவிட எண்ணுகிறார்கள். வெள்ளையர்களில் ஒருவன் ஒரு ஈட்டி போன்று கூர்மையான ஒரு கம்பை எடுத்து வருகிறான். அந்த கம்பை அழுத்தி வைத்து அடித்து தரையில் இறக்கின்றார்கள். ஆனால் அந்தக் கம்பு தரையில் செல்வதற்கு முன் ஒண்டி வீரன் கையைத் துளைத்துக் கொண்டு தரையில் செல்லுகிறது. பின்னர் அந்த வெள்ளையர்கள் குதிரையை அந்தக் கம்பில் கட்டிவிட்டு செல்லுகிறார்கள்.
அவர்கள் கம்பை அடித்து தரையில் செலுத்தும்போது, தனது கையை துளைத்துக் கொண்டு கம்பு செல்கிறது, ஆனால் இதன் வலியை ஒண்டி வீரன் சிறிதும் பொருட்படுத்தவில்லை, அவர் வலியில் துடிக்கவும் இல்லை, சத்தம் கூட போடவில்லை. எந்த வித அசைவும் இன்றி அவர் தரையில் படுத்திருந்தார். வெள்ளையர்கள் சென்றதும் எழுந்த ஒண்டி வீரன் தன் கையைத் துளைத்திருந்த கம்பை பிடித்து இழுத்து வெளியே எடுத்து அதனை தூரமாக வீசி எறிந்துவிட்டு, அந்த குதிரையின் மீது ஏறி நெற்கட்டான் செவ்வல் பகுதி வந்து புலித்தேவரை சந்தித்து தான் சொன்னதை செய்து விட்டதாக பெருமிதம் கொண்டார். புலித்தேவர் இவர் வீரத்தினை பெரிதும் பாராட்டுகிறார். அப்போது புலித்தேவர் ஒண்டி வீரனின் கையை கவனிக்கின்றார். கை கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. என்ன இது என்று கேட்டு பதறுகிறார் புலித்தேவர். ஒண்டி வீரன் நடந்ததைக் கூறுகிறார். உன் வீரமும், நாட்டுப்பற்றும் நாம் யார் என்று வெள்ளையர்களுக்கு உணர்த்தியிருக்கும் என்று ஒண்டிவீரனைப் புகழ்ந்தார் புலித்தேவர்.
pulithevar ii
1759ம் ஆண்டு நெற்கட்டான் செவ்வல் பகுதியின் மீது போர் தொடுத்த யூசுப்கான் படுதோல்வி அடைந்து திரும்பினான். அவன் மீண்டும் புலித்தேவரை போரில் வெற்றி கொள்ள நினைத்து, அந்த ஆண்டில் வாசுதேவ நல்லூர் மீது போர் தொடுக்கிறான். இந்தப் போரிலும் புலித்தேவர் யூசுப்கானை அடித்து விரட்டுகிறார். யூசுப்கான் மீண்டும் தோல்வி அடைந்து திரும்புகிறான். யூசுப்கான் எப்படியாவது புலித்தேவரை போரில் வெற்றி கொள்ள வேண்டும் என்று, மீண்டும் 1760ம் ஆண்டில் வாசுதேவ நல்லூர் மீது போர் தொடுக்கிறான். இந்தப் போரிலும் யூசுப்கான் புலித்தேவரிடம் தோல்வியை சந்திக்கிறான். யூசுப்கானின் கோபம் உச்சத்தில் இருந்தது. எப்படியாவது புலித்தேவரை போரில் வெற்றிகொள்ள என்ன செய்வது என்று வெள்ளையர்களுக்கு கடிதம் எழுதினான். யூசுப்கானுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. யூசுப்கான் மீண்டும் 1761ம் ஆண்டில் நெற்கட்டான் செவ்வல் மற்றும் வாசுதேவநல்லூர் மீது போர் தொடுக்கிறான். இந்தப் போரிலும் யூசுப்கான் தோல்வியை சந்திக்கிறான். புலித்தேவர் போரில் வெற்றி பெறுகிறார். இதனால் புலித்தேவரை வெற்றி கொள்ள வேண்டுமெனில் அதற்கு தகுந்த ஆலோசனைகள் கூறுமாறு யூசுப்கான் வெள்ளையர்களுக்கு கடிதம் எழுதினான்.
இந்தக் கடிதப் போக்குவரத்தினை கால்டுவெல் திருநெல்வேலி சரித்திரம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார் மற்றும் நாட்குறிப்புகளின் தந்தை என அழைக்கப்படும் அனந்த நாராயணன் என்பவரின் நாட்குறிப்பு பதிப்புகளிலும் புலித்தேவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 
http://siragu.com/?p=18515

Monday, 28 September 2015

கூடார ஒட்டகக் கதைதான் மூட்டுவலியும். முதலில் மூக்கை நுழைக்கும், பிறகு…

moottu vali1
ஒரு கூடாரத்தில் ஒருவன் இருந்தானாம். அவன் ஒட்டகம் வெளியே இருந்தது. அதிக குளிர் அடிக்கவே, ஒட்டகம் சிறிது மூக்கை மட்டும் உள்ளே நுழைத்தது. இவனும் “சரி மூக்கை மட்டும்தானே உள்ளே நுழைக்கிறது” என்று விட்டுவிட்டான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முகம், கழுத்து, வயிறு என முற்றிலுமாக உள்ளே நுழைந்து படுத்துக் கொண்டது. இவனுக்கு இடம் போதாமல், ஒட்டகத்தை வெளியிலும் தள்ளமுடியாமல் இவன் வெளியே படுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாம்.
இது ஒரு புகழ்பெற்ற உவமைக் கதை. மூட்டுவலிகளும் இந்த ஒட்டகம் போலத்தான். ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமாக்கி விடலாம். அல்லது அதனுடன் போராட வேண்டியிருக்கும்.
உண்மையில் மூட்டுவலிகளைப் பற்றிய சரியான புரிதல் பெரும்பாலானோருக்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் மூட்டுவலிகளைப் பற்றி முழுமையாக புரியவைப்பதும் சற்று சிரமம்தான்.
moottuvali 4
ஏனென்றால் நோய்க்கான காரணங்கள், நோயினால் ஏற்படும் உடல் உறுப்புகளின் பாதிப்புகள் என்பவை பலவகைப்படுகின்றன. ஆனால் எல்லாவிதமான மூட்டுவலிகளிலும் நோயாளிகள் ஒருசேர சொல்லும். ஒரே விளக்கம் “மூட்டு வலிக்கிறது” என்பதுதான்.
மேலும் இன்னொன்றையும் அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது “வலி மாத்திரை”(pain killer) போட்டால் வலி குறைந்துவிடுகிறது என்பதுதான். ஆனால் மூட்டுவலிகள் பல்வேறு காரணங்களால் வருகின்றன.
இவற்றை முழுமையாக இங்கே விளக்க முடியாது. ஆகவே முடிந்தவரை மிக சுருக்கமாக விளக்குகிறேன்.
ஒவ்வொரு விதமான மூட்டுவலியையும் பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுதலாம்.

ஆனால் இந்த அளவுக்கு புரிதல் பரவினால்கூட போதும். அதுவே பெரிய விடயம் என நான் நினைக்கிறேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Sunday, 27 September 2015

தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் உறுப்பினர்களின் நேர்காணல்- இறுதிப் பகுதி

tamil menporul7
கேள்வி: இணையம் பயன்படுத்தும் இந்தக் கால தலைமுறைக்கு இறுதியாக தாங்கள் சொல்ல விரும்புவது என்ன?
fsftn1
பதில்(பிரகாஷ்): செய்திகளைப் பார்த்து மக்கள் ஏமாந்து விடுகிறார்கள். இணையம் என்பதுமட்டும் கிடையாது, எதைப்பொறுத்து நடந்தாலுமே அது அப்படித்தான் நடக்கிறது. ஏனென்றால் இன்று பெரிய நிறுவனங்கள் என்ன செய்கிறார்கள் என்றால், serverஐ cloud க்கு மாற்றிவிடுங்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். மக்களும் cloud ஒருபெரிய வெற்றிபெற்ற மாதிரியாக பார்க்கிறார்கள். அதாவது Cloud என்றால் மேகக்கணினி என்று சொல்வோம். அதாவது server-ஐ நீங்களாக வைத்துக்கொள்ளாமல், நிறுவனங்கள் server-ஐ தருவார்கள், அந்த server-ல் நீங்கள் நிறுவுவீர்கள். உங்களுக்கே ஒரு இணையதளம் வேண்டும் என்றால் நீங்கள் உங்களுக்கென்று தனியாக ஆரம்பிக்காமல் google blogger வைத்திருப்பார்கள், அதில் நீங்கள் பதிவு செய்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு இணையதளம் கிடைத்துவிடும். சிறிது காலத்திற்கு முன்பு ரவி என்று விக்கிபீடியாவில் programme director. அவர் என்ன சொல்கிறார் என்றால், “இந்தத் தொழில் நுட்பங்கள் எல்லாம் வந்தபின்பு மக்கள் எல்லோரும் நிறைய அலைபேசியை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இப்பொழுது விக்கிபீடியா என்ற கட்டற்ற களஞ்சியத்தில் பயனர்கள் திருத்தம் செய்யும் முறை இருப்பதினால்தான், அது மென்மேலும் பெரிதாகிக்கொண்டே இருக்கிறது. அலைபேசி பயன்படுத்துவதினால் என்ன பிரச்சனை வருகிறது என்றால், மக்கள் பார்ப்பதோடு போய்விடுவார்கள், ஏனென்றால் அலைபேசியில் திருத்தம் செய்ய முடியாது”.

Apps - Tile Icons on Smart Phone
இப்பொழுது அனைவரும் app-ஐ தரவிறக்கம் செய்யுங்கள் என்பது ஒரு கலாச்சாரமாகப் பார்க்கப்படுகிறது. அதில் தரவிறக்கம் செய்தால் 50 ரூபாய், 20 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் என்பதைப் பார்த்துவிட்டு, அப்படியே சென்று விடுகிறார்கள். App பயன்படுத்துவதினால் என்ன பிரச்சனை என்றால், இப்பொழுது flipkart என்று எடுத்துக்கொண்டீர்கள் என்றால், இணையத்தில் பார்க்கும் பொழுது 100 தயாரிப்புகளைப் பார்க்கும் நபர், App-ல் நேரம் போய்க்கொண்டிருக்கும், அதனால் இரண்டு அல்லது மூன்று தயாரிப்புகளைப் பார்த்துவிட்டு சுலபமாக சமரசம் ஆகிவிடுவார்கள். முதலாளியாக இருப்பவருக்கு அது சந்தோசமான விடயம்தான். ஏனென்றால் நிறைய வாய்ப்புகளைப் பார்க்கமுடியாது. app என்றால் flipkartல் மட்டும்தான் பார்ப்பேன், நான் snap dealக்கு போய் பார்க்கமாட்டேன், ஆனால் இணையதளம் என்றால் அப்படி கிடையாது, நிறைய பார்க்கலாம். அதற்குப்பின் இருக்கிற அரசியல் என்பது பெரியவிடயம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Wednesday, 23 September 2015

முதல் சுதந்திர போராட்ட மாவீரர் பூலித்தேவர் – பகுதி-7



0
Sha
pulithevar ii
மருதநாயகத்தினை தூக்கில் போட்டு, இறந்த பிறகு, அவரது ஆத்மா வெள்ளையர்களை தூங்கவிடவில்லை இரவில் வெள்ளையர்களின் கனவில் சென்று அவர்களை அச்சமடையச் செய்தார். இது போன்று ஆற்காடு நவாப்பின் மனநிலையும் இருந்தது. வெள்ளையர்களுக்கும், ஆற்காடு நவாப்பிற்கும் மருதநாயகம் யூசுப்கானாக மாறி எத்தனை நன்மைகளை செய்தார், அத்தனைக்கும் சிறு நன்றி உணர்வு கூட இல்லாமல், அவர் குடும்பத்தை சிதைத்து அவரை தூக்கில் போட்டு கொன்றதினால், நன்றி மறந்ததினால் அவர்கள் மன நிம்மதியை இழந்து தவித்தனர். இந்த நிலைமையை சரி செய்ய வழியின்றி இவர்கள் தவித்தனர். மன நிம்மதியை இழந்து தவித்த வெள்ளையர்களும், ஆற்காடு நவாப்பின் ஆட்களும் சேர்ந்து மருதநாயகத்தின் உடலை பல துண்டுகளாக வெட்டி எடுத்தனர். அந்த வெட்டி எடுத்த உடல் உறுப்புகளை வெவ்வேறு இடங்களுக்குச் சென்று எரித்தனர் மற்றும் புதைத்தனர். மருதநாயகத்தின் தலை திருச்சியிலும், கைகள் பாளையங்கோட்டையிலும், கால்கள் தஞ்சாவூரிலும், மற்றவையை மதுரையிலும் வைத்து அனைத்து காரியங்களையும் செய்து முடித்தனர்.
இது போன்று இவர்கள் செய்வதற்குக் காரணம், மருதநாயத்தினைக் கண்டு அந்த அளவிற்கு அவரின் வீரத்தினைப் பார்த்து, அவர் மீது அச்சம் கொண்டிருந்ததுதான். மேலும் அவர் இறந்தாலும் மீண்டும் உயிர் பெற்று வந்து விடுவார் என்று அவர்கள் பெரிதும் அச்சம் கொண்டிருந்தனர். எனவேதான் அவர்களின் செயல்பாடுகள் இவ்வாறு இருந்தது.

இது போன்று வீரம் செறிந்த மருதநாயகம், 1759-ம் ஆண்டு திருநெல்வேலியிலிருந்து நெற்கட்டான் செவ்வல் பகுதி மீது போர் தொடுத்தான். இந்தப் போர் மிக நீண்ட நாட்கள் நடைபெற்றது. இதில் புலித்தேவரின் மறவர் படைத் தாக்குதலுக்கு முன் நிற்க முடியாமல் மருதநாயகத்தின் படைகள் பின் வாங்கியது. மருதநாயகம் தோல்வி கண்டு திருநெல்வேலி திரும்பினார். இந்த செய்தி வெள்ளையர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அனைத்துப் போர்களிலும் ஐரோப்பியர்கள் போன்று, அதி நவீன ஆயுதங்களைக் கொண்டு போர் செய்த மருதநாயகம் தோல்வி கண்டு திரும்புகிறார். புலித்தேவரின் மறவர் படைகள் வேல், வில் மற்றும் வாள் என்று தமிழர்களின் போர்க் கருவிகளைக் கொண்டு மட்டும் போர் செய்தனர். இவர்களின் வீரத்திற்கும், நாட்டுப்பற்றுக்கு முன் அதிநவீன போர்ஆயுதங்கள் பயன்படுத்தி போர் தொடுத்தவர்கள், அனைத்தும் தோற்று புறமுதுகிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று போர்களத்தில் இருந்து ஓடினர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Tuesday, 22 September 2015

தமிழர் உரிமை மீட்பரின் எழுத்துப் பயணம் – 1

இக்கால இந்தியாவின் அரசியலிலும், சமூக அமைப்பிலும் எண்ணற்ற மாற்றங்கள் எத்தனையோ ஏற்பட்டிருந்தாலும், வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க காலம் வரையில், ஒரு மாறுதலற்ற தேக்க நிலையில் இந்தியாவின் சமூக வாழ்வு அமைந்திருந்தது என்பதாக கார்ல் மார்க்ஸ் (The British Rule in India – Karl Marx) கருதினார். அதுபோன்றே, இந்தியாவின் நிலையில், பொருளாதார அடிப்படையில் படிப்படியாக புராதனப் பொதுவுடைமை, அடிமையுடமை, நிலபிரபுத்துவம், முதலாளித்துவம், சோஷலிசம் எனப் பல நிலைகளைச் சந்தித்ததற்கான வரலாற்றுச் சான்றுகளைக் காட்ட இயலாது என்று மார்க்சிய வரலாற்று ஆசிரியர் டி. டி. கோசாம்பி கருதினர்.
periyar1
இக்கருத்தைப் பெரியார் தனது கோணத்தில், நமது நாட்டில் இந்தச் சாதீய அடிப்படையிலான அடிமைத்தனம் ஒவ்வொரு அரசகுலத்தின் ஆட்சியிலும், பேரரசுகளிலும்மாறாது, காலம் காலமாக ஊறிப்போயிருப்பதாகக் குறிப்பார். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெளியிடப்பட்ட இந்திய மக்கள் கணக்கெடுப்பு அறிக்கை ஒன்று (1901), சென்னை மாகாணத்தில் நிலவிய சாதீயமானது மனிதர் ஒருவரின் வாழ்வை, வேலையை, இருப்பிடத்தை, சமூக அந்தஸ்தை, உணவை,பெயரை, உடையைத் தீர்மானிக்கிறது என்றே குறித்திருந்தது. இவ்வாறு வாழ்வில் பிறந்ததிலிருந்து, இறப்பதுவரை பிரிக்கவழியின்றி வாழ்வோடு கலந்து ஒருவரது வாழ்வின் போக்கையே தீர்மானிக்கும் நிலையில் புரையோடிப் போயிருந்த பாகுபாட்டையும், சமத்துவமற்ற பேத நிலையையும் அசைத்துப் பார்க்க முற்பட்டவர் தந்தை பெரியார். வரலாற்றுப் போக்கில் பெரியார் புரட்சி செய்த காலம் ஒரு மிக முக்கியமான காலகட்டம் என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஒரு எழுத்தாளராக … இதழியலாளராக … தனது எழுத்து, உரை ஆகியவற்றால் தமிழக வரலாற்றைப் புரட்டிப்போட்ட பெரியாரை, அறிஞர் அண்ணா, “பெரியார் ஒரு சகாப்தம்; ஒருகாலகட்டம்; ஒரு திருப்புமுனை” என்று புகழ்ந்துரைத்தார். அத்தகைய பெரியாரது கருத்துப் பரப்பல் முயற்சியை மீண்டும் திரும்பிப் பார்க்கும் பொழுது மலைக்க வைக்கிறது.

ஒரு எழுத்தாளராக, இதழியலாளராக போராட்டங்கள் பல சந்தித்து தனது கருத்துகளை, உரைகளை மக்களிடம் தனது பத்திரிக்கைகள் மூலம் கொண்டு சேர்த்த பெரியாரின் பணி வியக்கவைப்பது. தமிழகத்தில் வெறும் 7% மக்களே எழுதப் படிக்கத் தெரிந்திருந்த ஒரு காலகட்டத்தில், அவர்களிலும் 5% பிராமண குல மக்களாகவும் இருந்த காலத்தில், இந்துமதத்தின் ஆணிவேரை அசைக்கும் நோக்கில், சனாதன தர்ம அமைப்பையும், வர்ண முறையையும் தீவிரமாக எதிர்க்கும் கருத்துகள் நிரம்பிய ஏடுகளை, வசதியற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தினர் ஓரணா, ஈரணா என்ற விலையையும் கூடப் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வாங்கிப் படிக்கும் நிலையை உருவாக்கிய பெரியாரை, அதனால் மக்களின் சிந்தனையில் தெளிவை வளர்க்க விரும்பிய பெரியாரை எழுத்தாளராக, இதழியலாளராக பாராட்டுவது என்பதை அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவராலும் கூட சிறப்பாகச் செய்ய இயலாது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Monday, 21 September 2015

முப்பெரும் விழா: பேராசிரியர் முனைவர் க.பூரணச்சந்திரன்

poornachandran6
பேராசிரியர், முனைவர் க.பூரணச்சந்திரன் அவர்களின் இணையதள அறிமுகம், அறக்கட்டளை தொடக்கம், மின் நூல்கள் வெளியீடு ஆகியவற்றின் நிகழ்வுத் தொகுப்பு:-
முனைவர்திரு. ராஜ்குமார் வரவேற்புரை ஆற்றினார். பிஷப் ஈபர் கல்லூரி முதல்வர்திரு.பால் தயாபரன் அவர்கள் இணைய வெளியீடும் சிறப்புரையும் ஆற்றினார்.

poornachandran5

எழுத்தாளர்நாவலாசிரியர் இமயம் சிறப்புரையும் மின் இதழ்கள் வெளியீடும் செய்துபேராசிரியர் அவர்களுடனான தமது இலக்கிய தொடர்பு, தமது முதல் நாவலாகிய கோவேறுகழுதைகள் உருப்பெற பேராசிரியரின் துணை ஆகியவற்றை மலரும் நினைவுகளாகவும், எழுத்தாளனின் கடமையும் பொறுப்பும் குறித்தும் விரிவாகப் பேசினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.