மருதநாயகத்தினை
தூக்கில் போட்டு, இறந்த பிறகு, அவரது ஆத்மா வெள்ளையர்களை தூங்கவிடவில்லை
இரவில் வெள்ளையர்களின் கனவில் சென்று அவர்களை அச்சமடையச் செய்தார். இது
போன்று ஆற்காடு நவாப்பின் மனநிலையும் இருந்தது. வெள்ளையர்களுக்கும்,
ஆற்காடு நவாப்பிற்கும் மருதநாயகம் யூசுப்கானாக மாறி எத்தனை நன்மைகளை
செய்தார், அத்தனைக்கும் சிறு நன்றி உணர்வு கூட இல்லாமல், அவர் குடும்பத்தை
சிதைத்து அவரை தூக்கில் போட்டு கொன்றதினால், நன்றி மறந்ததினால் அவர்கள் மன
நிம்மதியை இழந்து தவித்தனர். இந்த நிலைமையை சரி செய்ய வழியின்றி இவர்கள்
தவித்தனர். மன நிம்மதியை இழந்து தவித்த வெள்ளையர்களும், ஆற்காடு நவாப்பின்
ஆட்களும் சேர்ந்து மருதநாயகத்தின் உடலை பல துண்டுகளாக வெட்டி எடுத்தனர்.
அந்த வெட்டி எடுத்த உடல் உறுப்புகளை வெவ்வேறு இடங்களுக்குச் சென்று
எரித்தனர் மற்றும் புதைத்தனர். மருதநாயகத்தின் தலை திருச்சியிலும், கைகள்
பாளையங்கோட்டையிலும், கால்கள் தஞ்சாவூரிலும், மற்றவையை மதுரையிலும் வைத்து
அனைத்து காரியங்களையும் செய்து முடித்தனர்.
இது போன்று இவர்கள் செய்வதற்குக் காரணம்,
மருதநாயத்தினைக் கண்டு அந்த அளவிற்கு அவரின் வீரத்தினைப் பார்த்து, அவர்
மீது அச்சம் கொண்டிருந்ததுதான். மேலும் அவர் இறந்தாலும் மீண்டும் உயிர்
பெற்று வந்து விடுவார் என்று அவர்கள் பெரிதும் அச்சம் கொண்டிருந்தனர்.
எனவேதான் அவர்களின் செயல்பாடுகள் இவ்வாறு இருந்தது.
இது போன்று வீரம் செறிந்த மருதநாயகம்,
1759-ம் ஆண்டு திருநெல்வேலியிலிருந்து நெற்கட்டான் செவ்வல் பகுதி மீது போர்
தொடுத்தான். இந்தப் போர் மிக நீண்ட நாட்கள் நடைபெற்றது. இதில்
புலித்தேவரின் மறவர் படைத் தாக்குதலுக்கு முன் நிற்க முடியாமல்
மருதநாயகத்தின் படைகள் பின் வாங்கியது. மருதநாயகம் தோல்வி கண்டு
திருநெல்வேலி திரும்பினார். இந்த செய்தி வெள்ளையர்களுக்கு பெரும்
அதிர்ச்சியாக இருந்தது. அனைத்துப் போர்களிலும் ஐரோப்பியர்கள் போன்று, அதி
நவீன ஆயுதங்களைக் கொண்டு போர் செய்த மருதநாயகம் தோல்வி கண்டு
திரும்புகிறார். புலித்தேவரின் மறவர் படைகள் வேல், வில் மற்றும் வாள் என்று
தமிழர்களின் போர்க் கருவிகளைக் கொண்டு மட்டும் போர் செய்தனர். இவர்களின்
வீரத்திற்கும், நாட்டுப்பற்றுக்கு முன் அதிநவீன போர்ஆயுதங்கள் பயன்படுத்தி
போர் தொடுத்தவர்கள், அனைத்தும் தோற்று புறமுதுகிட்டு உயிர் பிழைத்தால்
போதும் என்று போர்களத்தில் இருந்து ஓடினர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment