Thursday, 28 November 2019

உயிர்த்தோற்றம்


siragu uyiriyal5
செந்தமிழ் மொழியின் பண்டை இலக்கியங்களைச் சங்க இலக்கியங்கள் என்பர். தனித்தனிப் பாக்களால் இருந்தவற்றை அகப்பாடல்கள் என்றும், புறப்பாடல்கள் என்றும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்து, அவற்றை நானூறு என்ற எண்ணிக்கையிலும் பத்து என்ற எண்ணிக்கையிலும், நானூறு என்ற எண்ணிக்கையிலும், ஐந்நூறு என்ற எண்ணிக்கையிலும் தொகுத்துப் பண்டைத் தமிழ் அறிஞர்கள் வகைப்படுத்தித் தந்துள்ளனர்.
அவ்வாறு வகைப்படுத்தப்பட்ட சங்க இலக்கியங்களில் கடவுள் நம்பிக்கை பற்றிய செய்தியும், கடவுளால் படைக்கப் பெற்ற உடல் வகைகளைப் பற்றிய செய்தியும், அவ்வுடலை இயக்குகின்ற உயிர்களின் தன்மை பற்றிய செய்தியும், அவ்வுயிர்கள் தத்தம் பண்டை ஊழ்வினைக்கு ஏற்றவாறு உடம்பினைப் பெறுகின்றன என்ற செய்தியும் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியங்களில் பல்துறை அறிவியல் சிந்தனைகள் என்ற பொதுத் தலைப்பில், சங்க இலக்கியங்களில் காணப்படும் உயிர் பற்றிய கொள்கைகளை எடுத்துக்காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பண்டு தொட்டுத் தமிழகத்தில் வழங்கி வந்த கடவுள் கொள்கை முப்பொருளை உணர்த்தும். அதாவது வினையின் நீங்கி விளங்கிய அறிவனாக விளங்கும் இறைவன் முதற்பொருள். இறைவனைப் பதி என்ற குறியீட்டுச் சொல்லால் குறிப்பிடுவர். அந்த இறைவனின் கருணைப் பெரு வெள்ளத்தால், தனு, கரண, புவன போகங்கள் என்று கூறப்படும் உடம்பு, கருவிகள், உலகம், போகப் பொருள்கள் என்பவை படைக்கப் பெறுகின்றன. படைக்கப் பெற்ற பொருளைப் பயனுடையதாகக் கொள்வதற்குக் கடவுள் தோன்றிய பொழுதே, அவன் இயங்குவதற்குரிய நிலைக்களமாக உயிர்கள் தானே தோன்றின. அந்த உயிர்களின் இயக்கம் வினையின் அடிப்படையில் அமைகிறது என்ற வினைக்கொள்கையும் பண்டு தொண்டு வழங்கி வருகின்றது. இவ்வாறு தமிழகத்தில் கடவுள் கொள்கை பதி என்றும், உயிராகிய பசு என்றும், வினையாகிய பாசம் என்றும் முப்பொருளை அடிப்படையாகக் கொண்டு விளங்கி வருகின்றது. பதி, பசு, பாசம் என்ற கடவுள் கொள்கையின் முப்பொருளைச் சங்க இலக்கியங்கள் பலவாறு பதிவு செய்துள்ளன. அதில் உயிரின் தோற்றம் பற்றிய செய்திகளை இக்கட்டுரை தொகுத்துத்தர முற்படுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 26 November 2019

கடல் பயணம்


siragu kadal payanam1
மக்கள் பழங்காலம் முதலே பயணம் மேற்கொண்டுள்ளனர். நாடோடிகளாக, கால்நடை வளர்ப்பவர்களாக பழங்கால மக்கள் பயணப்பட்ட பயணங்கள் அதிகமாகும். நாகரீகம் வளர வளர நிலப்பயணம் தாண்டி நீரைக் கடக்கும் கடல் பயணத்திற்கும் செல்லும் நிலை ஏற்பட்டது. ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்லும் நடைமுறை வாய்த்தது.
கடல் பயணம் ஏன் அவசியம் என்று ஒரு கேள்வி எழுப்பினால் அதற்கு இன்றைய நிலையில் கிடைக்கும் பதில் பின்வருமாறு.
கடல் பயணத்தின் அவசியம் இரண்டு மட்டுமே
1.    பொருளீட்ட கடல் செல்லுதல்
2.    சுற்றுலா நிமித்தமாக
இவ்வுலகில் 90% வணிக பொருள் கடல் மார்கமாக தான் எடுத்துச் செல்கின்றது, என் என்றால்.. கடற்பயணம்
•    மிகவும் பாதுகாப்பானது
•    அதிக பொருள்கள் கொண்டு செல்ல முடியும்
•    சூழல் நட்பு உடையது
•    மிக மலிவானது

இக்காலத்திலேயே கடற்பயணம் இவ்வளவில் ஏற்புடையது என்றால் காற்றுவழி விமான சேவை வருவதற்கு முன்னதான காலத்தில் கப்பல் பயணம் மட்டுமே வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பினை அளித்தது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 25 November 2019

ஆய்வு வழியில் வள்ளுவர்


siragu thiruvalluvar1
ஆராய்ந்து அறியும் மனப்பான்மையைக் கொண்டோர் பண்புகள் எத்தகையனவாக இருக்கும்?
          அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
          பெரும்பயன் இல்லாத சொல். (பயனில சொல்லாமை: குறள் – 198)
அருமையான பயனளிக்கக் கூடியவை எவை என ஆராய்ந்து அதனை அடைய முயலுவோர், பெரும் பயன் தராத சொற்களைப் பேசமாட்டார்கள். அதாவது, அவர்கள் வெற்றுப் பேச்சைத் தவிர்ப்பவர்கள்.
வள்ளுவரும் அத்தகையவர் என்பதை அவர் தமது அறநூல் கருத்துக்களைக் குறட்பாக்களாக ஈரடியில் எழுதியது உறுதிப்படுத்துகிறது. இத்தகைய பண்பு கொண்ட வள்ளுவர் எப்பொழுதெல்லாம் ஆய்வு செய்யவேண்டும் என்கிறார்? ‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ (அறிவுடைமை: குறள் – 423) என்று கூறுமிடத்து, உண்மை எதுவென்று ஆராய்ந்து அறிவதுதான் அறிவுடைமை என்கிறார் வள்ளுவர். அவர் எந்தெந்த சூழ்நிலையில் ஆராய்வதைக் குறித்துத் தமது திருக்குறளில் கூறியுள்ளார் என்ற ஒரு மீள்பார்வை, வள்ளுவர் எவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதையும் நமக்கு அறியத் தரும். அதை கடைபிடிப்பது வாழ்வியல் வழிகாட்டியாகவும் உதவும் என்பதும் திண்ணம்.

நாம் ஆய்வைப் பயன்படுத்த வேண்டிய சூழல் எது? என்ற கோணத்துடன் குறட்பாக்களை ஆய்வு செய்யும்பொழுது (1) உறவுமுறை கொள்ளுதல், (2) செயலாக்கத் திட்டங்கள், (3) வாழ்வியல் அறிதல், (4) ஆட்சிமுறை அறங்கள் ஆகியவற்றில் ஆய்வுக் கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும் என்பது வள்ளுவரின் கூற்றின் மூலம் தெளிவாகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 20 November 2019

சங்க இலக்கியத்தில் உளவியல்


siragu enkunaththaan2
‘வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி’ என்பார் மகாகவிபாரதி. அத்தகைய வளம் நிரம்பியது தமிழ்மொழி. ஆனாலும் உலக அளவில் செவ்வியல் மொழி-அதாவது செம்மொழி என்று தமிழ்மொழி அறிவிக்கப்படவில்லை. கிரேக்கம், இலத்தீனம், எபிரேயம், சீனம், சமஸ்கிருதம் ஆகியன செம்மொழிகள் என அறிவிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டன. ‘செம்மொழி’ என்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு உலக அளவில் 11-தகுதிப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அத்தகைய 11-தகுதிப்பாடுகளும் தமிழ்மொழிக்கு உண்டு.
1.    தொன்மை, 2. தனித்தன்மை, 3. பொதுமைப்பண்பு, 4. நடுநிலைமை, 5. தாய்மைத்தன்மை, 6. பண்பாடுகலை பட்டறிவு இவற்றின் வெளிப்பாடு 7. பிறமொழித் தாக்க மிலாத் தனித்தன்மை 8. இலக்கியவளம் 9. உயர்சிந்தனை 10. கலை, இலக்கியத்தனித்தன்மை வெளிப்பாடு, பங்களிப்பு 11. மொழி, மொழி இயல்கோட்பாடு- என்ற 11 தகுதிப்பாடுகளில் ‘இலக்கியவளம்’ என்னும் கோட்பாடு குறித்தும், அது எவ்வாறு தமிழில் வெகுசிறப்பாக அமைந்துள்ளது என்றும் இச்சிறு கட்டுரையில் காண்போம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தமிழரின் உணவுமுறை


siragu unaviyal1
உயிரினங்கள் கூடிவாழும் உயிர்த்தொகுதி சமுதாயம் என்ற பெயரால் சுட்டப்பெறுகின்றது. சமுதாயத்தில் வாழும் எவ்வுயிராயினும் அவ்வுயிர், தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் உரிமையை இயற்கை வழங்கி இருக்கிறது. உயிரினங்களுக்கான நிலைநிறுத்தக்காரணிகள் பலவாறுயிருப்பினும் அவற்றுள் நிலம், உணவு என்ற இருகாரணிகளே மானுட வாழ்வில் பெரும்பங்காற்றுகின்றது. உணவு உற்பத்திக்கு நிலம் உதவுகின்றது. உயிர் வாழ உணவு தேவைப்படுகின்றது. இந்த அடிப்படையில் நிலத்துடன் இயைந்த தமிழரின் உணவுமுறையின் கூறுகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
உணவும் வாழ்வும்

ஆரம்ப காலத்தில் இனக்குழுச்சமூகமாக இருந்த மனித சமூகம் இயற்கையாகக் கிடைத்தவற்றை உண்டு வாழ்த்தல், அடுத்த நிலையில் தன் வயிற்றுப்பிழைப்பிற்காக வேட்டையாடுதல் என்றிரு வேறு நிலைகளில் உணவு சேகரிப்பு நடந்தது. உணவு சேகரிப்பு என்ற செயல்பாட்டிலிருந்து தான் மனித சமூக வரலாறு எழுதப்படுகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/

Monday, 18 November 2019

பண்பாட்டு படையெடுப்பும் – திருக்குறளும்


siragu thirukkural1
திருக்குறளைச் சுற்றி எப்போதும் வட்டமிடும் சனாதனம் விரும்பிகளிடம் இருந்து திருக்குறளை மீட்க வேண்டிய பொறுப்பு திராவிடர் இயக்கங்களுக்கு உண்டு. பரண் மீது தூங்கிக் கொண்டிருந்த திருக்குறளை மீட்டெடுத்து மக்களிடம் உலவ விட்ட பெறுமை திராவிடர் இயக்கத்தையே சாரும். திருக்குறள் ஏன் பரண் மீது தூங்கிக் கொண்டு இருந்தது? என்ற கேள்விக்குப் பின் இருக்கும் பதில் அது சனாதன எதிர்ப்பு பேசியது, வர்ணபேதங்களை எதிர்த்தது என்பது தான். இன்று எவை எல்லாம் திராவிடர் இயக்கத்தால் மீட்கப்பட்டு தமிழர்களின் அடையாளமாக மாற்றப்பட்டதோ அதை எல்லாம் தொடர்ந்து காவிகள் அணைத்து அழிக்கப் பார்க்கின்றனர். ஒரு பக்கம் திருக்குறளை உவமையாக பேச்சில் எடுத்துக்காட்டுவது மறுபுறம் திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசுவது, பட்டையும் கொட்டையும் மாட்டி விடுவது, திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பேருந்துகளில் திருக்குறள் என்பதை மாற்றி இந்து மத வாசகங்களை எழுதி வைப்பது என தொடர்ந்து தமிழ்நாட்டை மதசார்பற்ற நிலையில் இருந்து மாற்ற – கலவரத்தைத் தூண்ட ஆர்எஸ்எஸ் முயன்று வருகிறது. அதற்கு இன்றைய துருப்புச் சீட்டு திருக்குறள்.

திருக்குறள் ஏன் ஒரு மத நூலாக இருக்க வாய்ப்பில்லை என்பதை திருக்குறளும் மனுதர்மமும் என்ற நூலில் நாவலர் இரா. நெடுஞ்செழியன் பல எடுத்துக்காட்டுகளோடு எழுதி உள்ளார்கள். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
அந்த நூலின் சில பகுதிகளைப் பார்க்கலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 15 November 2019

இயற்பியல்

தமிழ் இலக்கியங்கள் வாழ்க்கையை எதிரொலிக்கின்றன. இயல்பு வாழ்க்கையா அல்லது கற்பனை வாழ்க்கையா என்பதை முடிவு செய்வதில் சில நேரம் தடுமாற்றம் நிகழும் ஏன் நம் சிலப்பதிகாரத்தையே கற்பனைக் கதை என்றும் உரைப்பர்.
அறிவியல் வளர்ச்சி மிகுந்த காலம் ஒன்று இருந்ததோ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் படியான செய்திகள் உள்ளன. இந்த நூற்றாண்டில் உள்ள சில கருவிகள் அக்காலத்திலேயே பயன்பாட்டில் இருந்தன.
Dec-23-2017-newsletter1

இன்றைய தினம் எத்தனையோ இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளது. தமிழ் மொழியின் பிறப்பிடம் குமரிக் கண்டமே குமரிக்கண்டம் பெரியது. ஆஸ்திரேலியா முதல் தென்ஆப்பிரிக்கா வரை இந்தியாவையும், இமாசல பிரதேசத்தையும் இணைந்தது உலகின் முதலில் பேசிய மொழி தமிழ்மொழிதான். ஆனால் குமரிக்கண்டம் மூழ்கியதை சிலப்பதிகாரம் மூலம் தெரிந்து கொள்ளலாம். உலகின் 6 துவக்க மொழிகளில் தமிழ் மொழி முதல் மொழி ஜப்பான் நாடு அனைத்து பல்கலைக்கழகங்களிளும் யாதும் ஊரே யாவரும் தேநீர் என்ற கணியன் பூங்குன்றனார் பாடல் வாயிலில் தமிழ் மொழியிலும், ஜப்பான் மொழியிலும் எழுதப்பட்டுள்ளதைநாம் அறியும் போது நம் உள்ளம் மிகவும் பூரிப்படைகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.