இந்தியாவின் சிறப்பே, அதனுடைய
பன்முகத்தன்மை தான். அதனை அழிக்கும் வேலையில், பாசக அரசு மும்முரமாக இறங்கி
இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகிறது. மத்திய அரசு மறுபடியும்
எடுத்திருக்கும் இந்த இந்தித்திணிப்பு மீண்டும் ஒரு மாபெரும் புரட்சிக்கு
வித்திடும் என்பதே உண்மை. நாடு முழுவதும் இந்தியை கட்டாயமாக்குவோம் என்ற
முனைப்பில் இறங்கியிருக்கிறது மத்திய பாசக அரசு. 1968 -ஆம் ஆண்டு
கொண்டுவரப்பட்ட மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறது
மதவாத அரசு.
நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வ மொழிகள்
பற்றி பரிந்துரைகள் அளிப்பதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழு கடந்த
காங்கிரசு ஆட்சியில் அமைக்கப்பட்டது என்றாலும், தற்போது 117 பரிந்துரைகளை
தற்போது கொடுத்துள்ளது. அதில் சிலவற்றை குடியரசுத் தலைவர் நிராகரித்து
இருக்கிறார். சிலவற்றிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment