எழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப்
படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப்
பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியாத உயரங்களை, தனித்தன்மைகளை,
புதுமைகளை வல்லமைகளை அவர் செய்தார் அல்லது அவரின் எழுத்துகள் செய்தன.
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. சிலப்பதிகாரக் கதையின் தொடர்ச்சி மணிமேகலைக் காப்பியம். சிலப்பதிகாரக் கதையில் கோவலன், கண்ணகி ஆகியோர் வாழ்நாளின் இறுதியைத் தொட்டுவிடுகின்றனர். முக்கியப் பாத்திரங்களுள் ஒன்றான மாதவி மட்டும் என்ன ஆனாள் என்பது தெரியாமல் சிலப்பதிகாரம் முற்றுப் பெற்றுவிடுகிறது. கோவலன், கண்ணகி இறப்பிற்குப் பின்னான மாதவியின் வாழ்க்கையை விரிக்க முயன்று மணிமேகலையின் கதையை வளர்க்கிறது மணிமேகலைக் காப்பியம். ஒரு பாத்திரம் அழிந்து கரைந்து போகும்வரை படைப்பாளனால் அப்பாத்திரம் வளர்த்தெடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81/
No comments:
Post a Comment