பொதுவாக இரவாடிப் பறவைகளை மனிதர்கள்
அதிகம் கண்டுகொள்வதில்லை. அவைகளை விரும்புவதுமில்லை. பகல்நேரத்து
பறவைகளைத்தான் அவர்கள் அதிகம் நேசிக்கிறார்கள். ஏனென்றால் பகலில்
விழித்திருந்து இரவில் உறங்குவது அவர்களின் வழக்கம். கிளி, புறா, மைனா
போன்ற பறவைகள் பகலாடிகள் அதனால் தங்கள் கண்ணில்படும் அவைகளை அவர்கள்
பைங்கிளி, மாடப்புறா, அழகுமைனா என்றெல்லாம் கொஞ்சுகிறார்கள்.
அந்தப்பறவைகளைக் கொஞ்சுவது போன்று, மனிதர்கள் தன்னையும் கொஞ்சவேண்டும் என
ஆந்தை ஒன்று ஏங்கியது. அதற்கு அது மனிதர்களின் கண்ணில்படும் விதத்தில்
பகலாடிப் பறவையாக நடமாட வேண்டும். அதுவுமல்லாமல் உலகமே பகலில்
விழித்திருந்து இரவில்தான் உறங்குகிறது. அப்படி இருக்கும்போது நாம்மட்டும்
ஏன் இரவில் அலைந்து திரியவேண்டும் என்றும் அது நினைத்தது. அது தனது
விருப்பத்தை கடவுளிடம் வரமாகக் கேட்டது. கடவுளும் வரம் தந்தார். அப்போது
முதல் அது பகலாடிப் பறவையாக மாறிப்போனது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment