Monday, 6 November 2017

அல்கட்ராஸ் தீவில் . . . (பகுதி- 5)


V. ‘மறைந்தாலும்’ மறக்கப்படாத கைதிகள்:
Siragu alcatraz5-1ஃபிரான்க் மோரிஸ் மற்றும் ஜான் ஆங்க்லின், கிலாரென்ஸ் ஆங்க்லின் சகோதரர்கள் அதிக கண்காணிப்பு கொண்ட அல்கட்ராஸ் தீவின் சிறையில் இருந்து தப்பியதற்கு மறுநாள், ஜூன் 12, 1962 அன்று காலையில் ஆறரை மணிக்கு மணியடித்து அனைவரையும் எழுப்பி அவர்கள் சிறைக் கதவருகில் நிற்கும் பொழுது எண்ணிக்கை எடுக்கப்பட்ட நேரம், தப்பிய மூவரும் தூங்குவது போலிருக்க, காவலாளிகள் அவர்களை அசைக்க முற்பட, பொம்மைத் தலைகள் தரையில் விழுந்து உருண்டோட, சிறையின் எச்சரிக்கை மணிகள் அலறியது. அறைகளைச் சோதனை செய்ததில் அவர்களது பொய்ச்சுவர் குட்டு வெளியாகியது, மற்ற அறைகளையும் சோதனை செய்த பொழுது ஆலன் வெஸ்ட்டும் மாட்டிக் கொண்டார். அவர் கூறிய தகவல்களைக் கொண்டும், புகை போக்கி அருகே கரி படிந்த கால் தடயங்கள் கொண்டும், மிதவை, துடுப்பு, தப்பிய முறை யாவும் காவலாளிகளுக்குத் தெரிய வந்தது. 
வழக்கமாக அனைவரும் முயற்சிப்பது போல தெற்கு நோக்கி சான் பிரான்சிஸ்கோ செல்லாமல், வடக்கு நோக்கி ஏஞ்சல் தீவுக்கு மூவரும் தப்பிச் சென்று, அங்கிருந்து மேலும் பயணித்து வடகரையில் ஏறி, ஒரு துணிக்கடையில் கொள்ளையடித்து ஆடைகளை மாற்றிக் கொண்டு, கார் ஒன்றைத் திருடி தப்பிவிடத் திட்டம் என்று ஆலன் வெஸ்ட் கூறியிருந்தார். காவல்துறையினர் தீவையும் கடலையும் அங்குலம் விடாமல் சோதனை செய்ததில் அவர்கள் அப்பகுதியில் இல்லை என்று தெளிவானது. இரண்டு நாட்கள் கழித்து மிதக்க உதவும் மேலங்கிகள் மூன்றும், துடுப்புகளும் கடலில் ஆங்காங்கே கிடைத்தன. அவற்றுடன் ஆங்க்லின் சகோதரர்கள் குடும்பப் படங்கள் நீர்ப்புகமுடியாத உரையொன்றில் கண்டெடுக்கப்பட்டது. அதனால் அவர்கள் மூழ்கிவிட்டார்கள் என்று கூறப்பட்டது. இல்லை அவர்கள் மூழ்கி இறந்துவிட்டதாக மற்றவர்கள் கருத வேண்டும் என்று ஏமாற்றும் நோக்கில் அவை வேண்டுமென்றே விட்டுச் செல்லப்பட்டன என்றும் மற்றொரு பிரிவினர் கருதினர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment