“திரு. சகாயம் IAS அவர்களின்
வழிகாட்டுதலின் படி இயங்கும் “மக்கள் பாதை” நண்பர்கள் இணைந்து தமிழக
மக்களுக்கு உன்னத நோக்கத்துடன் தரமான மருந்துகள் மிகக் குறைந்த விலையில் மத்திய அரசு அனுமதியுடன்
சிவகங்கையில் முதல் JAN AUSHADHI MEDICAL STORE (மக்கள் மருந்தகம்)
Generic Medical Shop துவங்கி உள்ளோம், இதை தமிழக மக்கள் பயன்
படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் தங்களின்
மருந்துப் பெயருடன் வாட்ஸ்அப் (9788052839) அல்லது svgjanaushadhi@gmail.comஎன்ற
மின்னஞ்சலுக்கு அனுப்பவும். தங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கிறோம்.
அனைத்து வகையான ஆங்கில மருந்துகளும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்.”
என்று தொடங்கி ஒரு நீண்ட செய்தி
புலனத்திலும் (whatsapp), முகநூலிலும் (facebook) பலருக்கு அனுப்பப்பட்டு
உள்ளது. அனுப்பப்பட்டுக் கொண்டும் இருக்கிறது. இச்செய்தியில்,
மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துச் சீட்டில் மருந்து உற்பத்தி
நிறுவனங்கள் சூட்டி உள்ள பெயரை எழுதுவதாகவும், அப்படி இல்லாமல்
மருந்துகளின் பெயரை எழுதிக் கொடுக்கும் படி கேட்டுக் கொள்ள வேண்டும்
என்றும் குறிப்பு உள்ளது. மேலும் உச்ச நீதிமன்றம் இதில் மிகுந்த அக்கறை
கொண்டு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள்
கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் “மக்கள் பாதை” நண்பர்கள்
குழுவினர் அவர்களுடைய உயர்ந்த எண்ணத்திற்காகப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
அதே சமயம் அவர்கள் கள்ளம் கபடம் சிறிதளவும் இல்லாமல், சூழ்ச்சியே உருவான
உலக மகா அயோக்கியர்களுக்கு எதிராகப் போராட முனைந்து இருக்கிறார்கள்
என்பதையும் குறிப்பிட வேண்டி உள்ளது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment