இன்றைக்கு நிலையற்ற அரசியல் சூழலில்
தமிழ்நாடு சிக்கித் தவித்து வருகின்றது. இந்துத்துவம் தன் கொடூரக் கைகளை
தமிழ்நாட்டின் மீது பரவத் துடிக்கின்றது. இந்த வாய்ப்பில் தான் கவிஞர்
வைரமுத்து ஆண்டாள் பற்றிக் கூறிய ஒரு ஆய்வுக் கட்டுரையின் மேற்கோளை பெரும்
சர்ச்சையாக்கி தமிழ் மண்ணை கலவர மண்ணாக மாற்ற சூழ்ச்சி செய்தது
பார்ப்பனியம். அந்த சர்ச்சையில் தான் பா.ச.க இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர
வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைத்து மத கலவரத்திற்கு வித்திட முயன்றது.
அந்த நேரத்தில் தான் பழ. கருப்பையா போன்றவர்கள் தமிழர்கள் இந்துக்கள் அல்ல,
என்ற எதிர் முழக்கத்தை முன் வைத்து பா.ச.க-வின் மத கலவர யுக்திக்கு எதிர்
வாதம் வைத்தனர்.
தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்றால்
தமிழர்கள் யார்? என்ற கேள்வி வலுப்பெறுகிறது. இந்தக் கேள்வியை வரலாற்று
ரீதியாக நாம் அணுக வேண்டிய தேவை உள்ளது. தமிழர்கள் இந்துக்கள் அல்ல, ஆனால்
அவர்கள் வீர சைவர்கள், வீர வைணவர்கள் என்ற குரல், வரலாற்றில் பிழையான,
ஆபத்தான குரல் மட்டுமல்ல, பார்ப்பனியத்திற்கு கொல்லைப்புறம் வழியாக
வரவழைக்கும் குரலும் என்பதை நாம் மறந்து விட முடியாது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment