வானவில் ஒரு நாள் தரைக்கு இறங்கிவந்தது.
அது ஒரு நதிக்கரையோரம் நடந்துசென்றது. அந்த நதிக்கரையை ஒட்டி இருந்த
வனப்பகுதியில் நிறைய பறவைகள் இருந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் நிறமில்லாமல்
அழகின்றி இருந்தன. பறவைகள் நிறமில்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்?
வானவில் ஆச்சரியம் அடைந்தது. அது நடந்துசென்று கொண்டிருந்தபோது அதனிடம்
கிளி ஒன்று வந்தது. கீச்…கீச்… என்ற அதன் குரலை வைத்துதான் அது கிளி என்றே
அடையாளம் கண்டுகொண்டது வானவில்.
“நீ ரொம்ப அழகா இருக்க! எனக்குக் கொஞ்சம் நிறம் கொடேன்!”–கேட்டதுகிளி.
“சரி தர்றேன்! உனக்கு என்ன நிறம் வேணும்?”– இது வானவில்.
“பச்சையும் சிகப்பும் எனக்கு ரொம்பப்
பிடிக்கும்!” – கிளி சொன்னது. மெத்தென்ற பஞ்சு போன்ற உடலுக்குப் பச்சை
நிறத்தையும், கூரிய நாசிக்குக் கோவைப்பழம் போல் சிவந்த வண்ணத்தையும் தந்தது
வானவில்: அதைப் பெற்றுக்கொண்ட கிளி அழகாக மாறியது. அது வானவில்லுக்கு
நன்றி சொல்லிவிட்டு போனது.
சிறிது தூரத்தில் புறா ஒன்று எதிர்பட்டது. அது வானவில்லிடம் தனக்கு நிறம் தருமாறு கேட்ட.து.
“என்ன நிறம் வேணும்?”–கேட்டது வானவில்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment