இந்த 2018 ஆம் ஆண்டுடன் ‘திறன்பேசி’
உருவாக்கப்பட்டு கால்நூற்றாண்டு ஆகிவிட்டது. திறன்பேசி என்பதன் பொருள்
என்ன என்பதன் அடிப்படையில் 25 ஆண்டுகள் என்பது இந்தக் கணக்கு. இருப்பினும்
இது குறித்து பலருக்கும் பல்வேறு கோணங்கள் இருக்கக்கூடும்.
இன்று வாழ்வோரில் “ஹலோ! யார் பேசறது?”
என்று கேட்காதவர் இருக்க வழியில்லை என்றே தோன்றுகிறது. ஒலியைப் பல
அலைவரிசைகளில் மின்துடிப்புகளாக (அல்லது அதிர்வுகளாக) மாற்றி, அதனைக்
கம்பிவழி கடத்தி மீண்டும் ஒலியாக ஒலிக்கச் செய்யும் முறையைக் கொண்டு
“தொலைபேசி” என்ற கருவியை 1876ல் கிரஹாம் பெல் உருவாக்கினார். தொடர்ந்து
கம்பிவழி ஒலியைக் கடத்தும் தொலைபேசி பற்பல வளர்ச்சிகளைக் கண்டது. ஆனாலும்
கருவியை விரும்பும் இடத்திற்கு ஒருவர் தம்முடன் எடுத்துச் செல்ல
இயலாதிருந்தது. இந்நிலையை மாற்றியது செல்லிடத்திற்கு எடுத்துச் செல்லும்
செல்பேசிகள். ‘மோட்டோரோலா’ நிறுவனமே முதலில், 1973 இல் கம்பிவழியின்றி
அலைவரிசை வழியாகப் பேசும் மொபைல்ஃபோன் என்றழைக்கப்படும் தொலைபேசியை
உருவாக்கியது. மோட்டோரோலாவின் ஆய்வாளர் மார்ட்டின் கூப்பர் என்பவர்
மன்ஹாட்டனில் இருந்து ஏப்ரல் 3, 1973 அன்று, நியூஜெர்சியில் உள்ள பெல்
ஆய்வு நிறுவனத்தின் தலைமையகத்தில் பணிபுரிந்த தனது போட்டியாளரான ஜோயல் எஸ்.
ஏங்கெல் என்பவருக்கு முதல் அழைப்பை அனுப்பிப் பேசினார். அதன் பிறகு இன்று
நாம் பயன்படுத்தும் வகையில் அந்த கைபேசியின் வளர்ச்சி வியக்கத்தக்க வண்ணம்
மாறியுள்ளது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment