அண்ணாவை விமான நிலையத்தில் வழி அனுப்பிய
பின் ஓரளவிற்கு நிம்மதியுடன் இருந்ததுடன், அமெரிக்காவில் அண்ணாவுக்கு அறுவை
சிகிச்சை வெற்றிகரமாக டாக்டர் மில்லர் அவர்களால் நடத்தப்பெற்றது என்ற
செய்தி அறிந்து மிகவும் மகிழ்ந்தார் அய்யா. திருச்சி கல்வி நிறுவனங்களின்
சார்பில் (அங்கு ஆண்டுதோறும் நடைபெறுகிறது) நடைபெற்ற நிறுவனர் நாள்
விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் கலந்து கொண்ட அய்யா அவர்கள்,
அண்ணாவிற்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது குறித்து மிகுந்த மகிழ்ச்சியான
செய்தி என்று கூறி அண்ணா நலம் பெற தனது விருப்பத்தையும் தெரிவித்தார்!
அய்யாவின் பிறந்த நாள் செய்தி என்று
ஆண்டுதோறும் மலருக்கென எழுதி, வாங்கும் முயற்சிகளை, நான் பொறுப்பேற்று மலர்
வெளியிடுவதைத் தொடங்கிய 1962 ஆம் ஆண்டிலிருந்தே கடைப்பிடித்து
வந்துள்ளேன். அய்யா மறைந்த ஆண்டான 1973, செப்டம்பர் வரை அவரது ஒவ்வொரு
பிறந்த நாளுக்கு முன்னமே அவரது எண்ணக் குவியல், சிந்தனை ஓட்டம், அவர்
மக்களுக்குத் தரும் செய்தியை அதில் உள்ளடக்கியே எழுதும் படி வேண்டிட
அய்யாவும் மகிழ்ச்சியுடன் அதைச் செய்தார்கள்!
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment