4 ஆடி 10 அங்குல உயரத்தில் ஒரு பெண்,
மிகப் பெரிய கொள்ளைக்காரியாக திகழ்ந்தார் என்பது வியப்பைத் தருகின்றதா? ஆம்
ஒடுக்கப்பட்டச் சமூகத்தில் பிறந்த ஒரு பெண் சாதியின், ஆணாதிக்கத்தின்
விளைவால் எந்த அளவிற்கு மனம் வெறுத்து தன்னை பாலியல் வன்புணர்வு செய்த
சாதியவாதிகளை பழிவாங்க கொள்ளைக்காரியாக மாறினார் என்பதை பூலான் தேவி
அவர்களின் வாழ்க்கையைப் படிக்கும் போது தெரிந்துக் கொள்ள முடியும். பூலான்
தேவி உத்திரபிரதேச மாநிலத்தில் ஆகஸ்ட் 10 1963 ஆம் ஆண்டு, ஜலான்
மாவட்டத்தில் இருக்கும் ஜோர்க்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தார்.
மல்லாஸ் எனப்படும் மிகவும் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். படகு
ஓட்டுவது தான் இவர்களின் வாழ்வாதாரம்.
அன்றைய காலக் கட்டங்களில் பெண் குழந்தைகள் வயதுக்கு வரும் முன்னரே திருமணம் செய்யும் முறை மிகத் தீவிரமாக வடநாடுகளில் (இன்றும் கூட ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது) உண்டு. பூலான் தேவிக்கும் 11 வயதிலேயே (வயதுக்கு வரும் முன்னரே) திருமணம் நடந்தது. ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்த, 30 வயது புட்டிலால் என்பவன் கணவன். வயது வரும் வரை அம்மா வீட்டில் இருந்த பூலான் தேவியை வலுக்கட்டாயமாக புட்டிலால் இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வுச் செய்து கொடுமை செய்தான். அங்கிருந்து சில நாட்களில் தப்பி வந்த பூலான் தேவி தன் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தார். இந்த நிலையில் பூலான் தேவியின் கணவன் மீண்டும் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டான். கேட்கவே கொடுமையாக இருக்கின்றது அல்லவா? தமிழ் நாட்டில் இன்று தந்தை பெரியார் போன்ற தலைவர்கள், திராவிடர் காட்சிகள் கொண்டு வந்த திட்டங்கள் காரணமாக இந்தக் கொடுமைகள் ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கின்றது. ஆனால் வடநாடு நம்மை விட இன்றும் பெண்கள் விடுதலை, சமூக நீதி போன்ற தளங்களில் மிக பின்தங்கி இருக்கின்றன. அந்த பின்தங்கிய சூழலால் பாதிக்கப்பட்டவர் தான் பூலான் தேவி.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF/
No comments:
Post a Comment