மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி என்பவரை
மகாத்மாவாக பரிணமிக்கச் செய்தவர்களில் மிகப் பெரிய பங்கு அன்னை கஸ்தூரி
பாய் அவர்களுக்கு உண்டு. காந்தியடிகளுக்கு இளம் வயதிலேயே திருமணம்
நடைபெற்றது. இளம் வயது முதலே கஸ்தூரி பாய் அவர்களுடன் கலந்து பழகிய
காரணத்தினால் காந்தியடிகளுக்கு மிகச் சிறந்த துணைவியாக அன்னை கஸ்தூரிபாய்
விளங்கினார்.
அன்னை கஸ்தூரிபாய் அவர்களும்
காந்தியடிகளுக்கு பல வழிகளில் வழிகாட்டியாக, காந்தியக் கொள்கைகளை ஏற்பவராக
சிறந்த சத்யாகிரகியாக விளங்கியனார். இளம் வயதிலேயே திருமணம் ஆன
காரணத்தினால் காந்தியடிகள் கஸ்தூரிபாயை தன் விருப்பப்படி அமைத்துக்கொள்ள
விரும்பினார். கஸ்தூரிபாயை ஆலயத்திற்கு அடிக்கடி போகக் கூடாது, தோழிகளுடன்
உரையாடக் கூடாது என்றெல்லாம் காந்தியடிகள் கட்டுப்படுத்தியதுண்டு. இதற்குக்
கட்டுப்பட்டும் கட்டுப்பாடாமலும் கஸ்தூரிபாய் நடந்து வந்தார்.
கட்டுப்பட்டபோது மகிழ்ந்த காந்தியடிகளில் கட்டுப்படாதபோது வருத்தப்படமால்
இருக்க இயலவில்லை. தன் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் கட்டுப்பாட்டை
மீறும்போது கோபம் வரும் என்பதை அறிந்துகொள்ள இந்த அனுபவங்கள்
காந்தியடிகளுக்குக் கைகொடுத்தன.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment