கடந்த நான்கு நாட்களாக, நம் எல்லோரையும்
மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகிய ஒரு செய்தி என்னவென்றால், விருதுநகர்
மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு எச்ஐவி ரத்தம்
செலுத்தப்பட்ட விவகாரமாகத்தான் இருக்க முடியும். இந்த செய்தியை விட்டு
வெளியே வரமுடியாத நிலையில், மேலும் மற்றொரு செய்தி வெளியாகி இருக்கிறது.
சென்னை மாங்காடைச் சேர்ந்த ஒரு பெண்ணும் தற்போது, தனக்கும் இதுபோன்ற கொடுமை
நிகழ்ந்ததாக தெரிவித்திருக்கிறார். அதுவும், தலைநகரத்திலேயே, மிகப்பெரிய,
மிகசிறந்த அரசு மருத்துவமனையாகக் கருதப்படும் கீழ்ப்பாக்கம்
மருத்துவக்கல்லூரியில் இந்த மனித தவறு நடந்திருப்பதாகக் கூறுகிறார்.
எப்படி இப்படிப்பட்ட அலட்சியப்போக்கு அரசு மருத்துவமனைகளில் ஏற்படுகிறது என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எப்படி இப்படிப்பட்ட அலட்சியப்போக்கு அரசு மருத்துவமனைகளில் ஏற்படுகிறது என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஏற்றப்படும் ரத்தம் எவ்வித
தொற்றுமில்லாமல் பரிசுத்தமானதா என்ற சோதனையைக் கூட எடுக்கவில்லை என்றால்,
இந்த துறையின் செயல்பாடுகள் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்.!
சாத்தூரைச் சேர்ந்த எட்டு மாத கர்ப்பிணி
பெண் ஒருவருக்கு, ரத்தம் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டதால், அந்த பகுதி
அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டது. அதன்பிறகு, வீட்டிற்கு வந்த
அந்த பெண்ணிற்கு உடல்நலம் பாதிப்பிற்கு உள்ளானது. வயிற்றுப்போக்கு, வாந்தி
என சில உடல் உபாதைகளால், மீண்டும் அங்கே சென்றிருக்கிறார். அப்போது
ரத்தப்பரிசோதனையின் போது அப்பெண்ணிற்கு எச்ஐவி தொற்று இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது. முந்தைய பரிசோதனைகளின் போது இல்லாத தொற்று, தற்சமயம்
எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்தநிலையில், சிவகாசியைச் சேர்ந்த ஒரு
இளைஞர் அளித்த ரத்தத்தில், இந்த தோற்று இருப்பது அறியப்பட்டது. இதில்
மிகவும் கொடுமையான ஒரு விசயம் என்னவென்றால், ‘ரத்ததானம் செய்தபோது தனக்கு
இந்த தொற்று இருப்பது தெரியாது. வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்தபோது,
பரிசோதித்த ரத்தத்தில் தொற்று இருப்பது தெரிந்தவுடனே, மருத்துவமனைக்கு
தெரிவித்து விட்டேன்.’ என்று அந்த இளைஞர் கூறியிருக்கிறார். மேலும், அந்த
இளைஞர் தற்கொலைக்கு முயற்சி செய்து, தற்சமயம் சிகிச்சையில் இருக்கிறார்
என்பதுவுமாகும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment