வழக்கமாக நான்கு மணிக்கு
படுக்கையிலிருந்து எழும் பழக்கமுடைய குமார் அன்று பொழுது விடிந்ததுகூட
தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தான். இரவு படுக்கப்போகும் போதே சொல்லி
இருந்ததால் அவனை எழுப்பாமல் தன்னுடைய வழக்கமான வேலைகளைச் செய்து
கொண்டிருந்தாள் விமலா.
வீட்டிற்கு வெளியில் ஏதோ வண்டியின் ஆரன்
சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தவன் கதவைத் திறந்தபோது அவனுக்கு அங்கு
இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அவன் எதிர்பார்த்தவன் ஆனால்
எதிர்பார்க்காத நேரத்தில் வந்திருந்தான். அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்க
முற்பட்டாலும், எனக்கு நேரமில்லை, பஸ் வந்திடுச்சி. ஏழு ஏழரைக்கெல்லாம்
புறப்படும், கிளம்பி வந்து விடுங்க! என்று இருசக்கர வண்டியில் இருந்து
இறங்ககூட நேரமில்லாத அவனது நண்பனான சங்கர் சொல்லிவிட்டு கிளம்பினான்.
அப்போது அவனது மனைவி விமலா, ‘போகாமல்
இருந்துவிடலாம் என்று தானே! இருந்தீங்க, அதனால்தானே என்னை காலையில் எழுப்ப
வேண்டாமென்று சொன்னீங்க!’ என்றாள்.
“போம்மா! ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள்தான்
விடுமுறை கிடைக்குது. அன்னைக்குன்னுப் பார்த்து இந்தமாதிரி ஏதாவது
நிகழ்ச்சி வந்திடுது” என்று அவன் சலிப்போடு சொன்னாலும் அவனது சலிப்பிற்கான
காரணம் சோம்பேறித்தனம் அல்ல என்பது அவனுக்கு மட்டும்தான் தெரியும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment